பென்னாகரம், ஜூலை 15- பென்னாகரம் பகுதியில் பல்வேறு அரசு பணிகள் நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள முள்ளுவாடி ஏரியை தூர் வாரி சீரமைக்க ரூ.1 கோடியே 97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூர்வாரும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், ஆக்கிரமிப்பு களை அகற்றி, பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இதேபோல், பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகயை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், கட்டு மான பணிகள் மெத்தன போக்குடன் நடை பெறுவதை கண்டித்தார். பணிகளை விரை வாக முடிக்க அறிவுறுத்தினார். இதையடுத்து, கிருஷ்ணாபுரம் மின் மயான பணிகள், ரூ.3 கோடியே 36 லட்ச மதிப் பீட்டில் நடைபெற்று வரும் குப்பை கிடங்கு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அனைத்து கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியில் இருக்கும், ஆக்கிர மிப்புகளை அகற்றி, அரசு நிலங்களை முறை யாக கையகப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் விரைந்து வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி உத்தரவிட்டார்.