தருமபுரி, டிச.10- தருமபுரி அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பாக கூத்துக்கலையும், பண் பாடும் என்னும் பொருளில் சிறப்புச் சொற் பொழிவு நடைபெற்றது. இதில், திருவாரூர் தமிழ்நாடு மத் திய பல்கலைக்கழக தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் க.இரமேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, கலைகளில் தலையாய கிராமக் கலையாகக் கருதப்படும் தெருக்கூத்து கிராமியப் பண் பாட்டின் உச்சம் என்பதை பல்வேறு உதார ணங்களுடன் எடுத்துக் காட்டினார். இந்நிகழ்வில் தமிழ்த்துறை பேராசிரியர்கள் முனைவர் அ.கௌரன், முனைவர் சி.கணே சன், முனைவர் ப.சி.சரவணன், முனைவர் கு.சிவப்பிரகாசம், முனைவர் சீ.அன்பர சன், முனைவர் ப.குப்புசாமி உட்பட நூற்றுக் கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண் டனர்.