உதகை, செப்.23- கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் சாட்சி யங்கள் இடையே விசாரணை நடத்த அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் நீதிபதி யிடம் கால அகவசம் கேட்கபட்டதால் வழக்கு விசாரணை அக்.28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முருகன் உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை குறித்த மறு புலன் விசாரணை கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மேற்பார்வை யில், மாவட்ட கூடுதல் கண்காணிப் பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை காவல் துறையினர் மிக தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த வழக்கு சம்பந்தமாக மறு புலன் விசாரணையில் குற்றம் சாட் டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ், ஜித்தன் ஜாய், ஜம்சிர் அலி உட்பட 10 நபர்களிடமும், முக்கிய குற்றவாளியாக கூறப்படும் வாகன விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோ ரிடம் தனிப்படை காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அவர்களிடம் சேகரிக்கப் பட்ட தகவலின் அடிப்படையில் பல் வேறு கோணங்களில் தனிப்படை காவல்துறையினர் சார்பில் விசா ரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நீதிபதி முருகன் முன்னி லையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு சார்பில் வழக்கறிஞர் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகி யோர் ஆஜராகி இவ்வழக்கு விசா ரணை சம்பந்தமாக இதுவரை 316 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சேக ரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் 516 செல்போன் தடையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்களை கைப் பற்றி ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்விசாரணையானது கேரளா, கர் நாடகா போன்ற பகுதிகளில் விரிவு படுத்த வேண்டிய சூழ்நிலை இருப் பதாலும் வழக்கின் முக்கிய குற்றவாளி யாக கூறப்படும் வாளையார் மனோஜ் வழக்கினை தீவிரப்படுத்த உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் சாட்சி யங்களிடையே விசாரணை நடத்த கூடுதல் அகவாசம் வேண்டும் என நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற நீதிபதி முருகன் வழக்கு விசாரணையை எதிர்வரும் அக்.28 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந் நிலையில், வழக்கில் புதிய திருப்ப மாக வாகன விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனக ராஜின் சகோதரர் தனபாலிடமிருந்து 13 செல்போன்கள் மற்றும் 6 சிம் கார்டுகள் பறிமுதல் செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.