districts

img

தல மலையில் கனமழை: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு, செப்.7- தலமலை வனப்பகுதியில் கன  மழை பெய்ததால் காட்டாறு வெள்ளத் தால் 2 தரைப்பாலங்கள் மூழ்கி போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.  ஈரோடு மாவட்டம், தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்க ளாக விட்டுவிட்டுபலத்த மழை பெய்து  வருகிறது. அதேபோல் செவ்வாயன்று  காலை முதல் அவ்வப்போது பலத்த  மழையாகவும் , தூறல் மழையாகவும் பெய்து வந்தது. இந்நிலையில் தல மலை, கோடிபுரம், பெஜலட்டி, காளி திம்பம், ராமரணை ஆகிய கிராமங்க ளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஓடைகளில் காட்டாற்று வெள் ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ராமரணை அருகே உள்ள தரைப்பா லத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித் தது. இதனால்  தலமலையில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. சுமார் 2  மணி நேரத்துக்கு பிறகு வெள்ளம்  வடிந்தது. அதன்பிறகே போக்குவரத்து சீரானதுத. தொடர்ந்து மழை பெய்து வந் ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  அதேபோல் தொட்டகாஜனூர், மெட்டல்வாடி, அருள்வாடி, சூசைபுரம், திகனாரை ஆகிய பகுதிகளில் செவ்வா யன்று பலத்த மழை பெய்தது. இதனால் இங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள் ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொட்ட காஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பா லத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்க டித்து சென்றது. சிலர் ஆபத்தை உண ராமல் தரை பாலத்தை கடந்து சென்ற னர். இதனால் அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தரைப்பா லத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். தொடர்ந்து தாளவாடி சுற்று வட்டார பகுதியில் மழை பெய்து வருவ தால் விவசாய பயிர் அழுகி வருகிறது.  இதனால் விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர்.

;