districts

img

கோழி பிடிக்கும் ஜல்லிக்கட்டு

நாமக்கல், ஜன. 16-  நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் குழந் தைகள், பெண்கள் பங்கேற்று கோழியை பிடிக்கும் போட்டியில், ஏராளமானோர் பங் கேற்றனர்.  தைப்பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக் கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி களில், பெண்களோ, குழந்தைகளோ பங் கேற்க முடியாத நிலை இருந்து வந்தது.  இதனை கருத்தில் கொண்டு, பெண்களும், குழந்தைகளும் பங்கேற்கும் வகையில், நவீன ஜல்லிக்கட்டு போட்டியை திருச்செங் கோடு நந்தவன தெருப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மன்றத்தினர் உருவாக்கினர்.  இதில் ஒரு பெரிய வட்டம் போட்டு, அந்த  வட்டத்திற்குள் ஒரு பெண் அல்லது குழந்தை யின் கண்களை கட்டிவிடுவர். தொடர்ந்து, கண்கள் கட்டப்பட்டவரின் ஒரு காலில் கயிற் றின் ஒரு முனையையும், மற்றொரு முனையை கோழியின் கால்களிலும் கட்டிவி டுவர். இதில், விதிமுறைகளுக்கு உட்பட்டு கோழியை கைகளால் பிடிப்பவர்களுக்கு பரி சுகள் வழங்கப்படும். கடந்த 17 ஆண்டுகளாக இந்த போட்டி களை நடத்தி வரும் இளைஞர் மன்றத்தி னர் இந்த ஆண்டும் நவீன ஜல்லிக்கட்டு போட் டியை நடத்தினர். இதில் ஏராளமான பெண்க ளும், குழந்தைகளும் கலந்து கொண்டு கோழி  பிடிக்கும் போட்டியில் பங்கேற்றனர். கோழியை தவறவிட்டவர்கள், வட்டத்துக்கு வெளியே வந்தவர்கள் என பலரும் பல்வேறு  விதமாக விளையாடியது பார்வையாளர் களை கவர்ந்தது.