districts

img

திருப்பூரில் இஸ்லாமிய அமைப்பினர் மறியல்

திருப்பூர், செப். 30 - இஸ்லாமிய அமைப்புகள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் ஒன்றிய அரசைக் கண்டித் தும், ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய் யக் கோரியும் திருப்பூரில் பல்வேறு இஸ்லா மிய அமைப்பினர் வெள்ளியன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். என்ஐஏ அமைப்பின் மூலம் இஸ்லாமிய  அமைப்புகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்துவதாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி  ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனம் முழங்கி னர். கடந்த சில  தினங்களுக்கு முன்பு பிஎப்ஐ  அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்ட பின்ன ணியில், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும்  அதன் நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நோக் கில் ஒன்றிய அரசு நடந்து கொள்வதாக குற் றம் சாட்டி மறியலில் ஈடுபட முயன்றனர். திருப் பூர் காங்கேயம் சாலை சி.டி.சி கார்னர் பகுதி யில் திருப்பூர் மாவட்ட அனைத்து இஸ்லா மிய அமைப்பினர் மற்றும் ஜமாத் இயக்கங் கள்  இதில் கலந்து கொண்டன. முன்னதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சா.பிரபாகரன் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் இங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். மறிய லில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட ஆயி ரத்திற்கும் மேற்பட்டோரை காவல் துறையி னர் கைது செய்தனர்.

;