districts

img

பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து பாமகவினர் மிரட்டல்

கோவையில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 26-  சென்னையில் டைம்ஸ்  ஆப் இந்தியா அலுவலகத் திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்த பாமகவினரை கண் டித்து கோவை மாவட்ட பத் திரிகையாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழ னன்று கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர் களின் வருகை பதிவு குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரி கையில் அண்மையில் செய்தி வெளியானது. இதில்  பாமக நாடாளுமன்ற உறுப் பினர் அன்புமணி ராமதாஸ் மிக குறைவான நாட்கள் மட்டும் வருகை தந்துள்ள தாக குறிப்பிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் சிலர் புதனன்று சென்னையிலுள்ள டைம்ஸ்  ஆப் இந்தியா அலுவலகத் திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், நாடாளு மன்றம் செய்தி குறிப்பு வெளியிட்டதன் அடிப்படை யில் செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா அலு வலகத்தில் பாமகவினர் அத்துமீறி நுழைந்து செய்தி யாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததை கண்டித்து  கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். 

மேலும், இந்த ஆர்ப் பாட்டத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடை பெற்று வருகிறது. இதனை செய்தியாக்கும் ஊடகவிய லாளர்கள் பல இடங்களில் குறிவைத்து தாக்கப்படுகி றார்கள். குறிப்பாக, செய்தி யாளர்கள் போலீசாரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிக ரித்து வருகிறது. குறிப்பாக, அசாம் மாநிலத்தில் தொலைக்காட்சி அலுவலகத் திற்குள் புகுந்து போலீசார்  தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதேபோல், தொலைக் காட்சிகள் எதனை செய்தி யாக்க வேண்டும் என்று  அரசாலும், ஆட்சியாளர்க ளாலும் நிர்ப்பந்திக்கப்படு கின்றனர். இத்தகைய நட வடிக்கைகளை கண்டித் தும், ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித் தும் மூத்த பத்திரிகையாளர் கள் உரையாற்றினர். இதில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரி கையாளர் பாதுகாப்பு மசோ தாவை உடனடியாக நிறை வேற்றிட வேண்டும். கருத்து சுதந்திரத்தை பாதுகாப் போம் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட் டன. இதில் திரளான ஊட கவியலாளர்கள் பங்கேற்ற னர்.