districts

img

கனமழை எச்சரிக்கை - மாவட்டங்களில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரம்

கோவை, மே 18- கோவை மற்றும் நீலகிரியில் கன மழை எச்சரிக்கை காரணமாக மாவட் டங்களில் முன்னேற்பாடு நடவடிக்கை களை மாவட்ட நிர்வாகம் சார்பில்  செய்யப்பட்டுள்ளன. கோவை, நீலகிரி உட்பட தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த  சில தினங்களுக்கு கனமழை பெய்யும்  என வானிலை மையம் தெரிவித்துள் ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத் திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ள நிலையில் வெள்ளியன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்க ளில் பல்வேறு இடங்களில் பலத்த மழை  பெய்துள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டம் பில்லூர் அணை பகுதியில்  17 சென்டிமீட்டர் மழைப்பதிவாகி யுள்ளது. கோவை விமான நிலையம்  பகுதியில் 4.1 செ.மீ, தொண்டாமுத்தூர் பகுதியில் 5 செ.மீ, பொள்ளாச்சி ஆழி யார் அணைப்பகுதியில் 5.1 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதே போல நீலகிரி மாவட்டம் குன் னூரில் 17.1 செ.மீ மழை பதிவாகியுள் ளது. பர்லியார் பகுதியில் 7.8 சென்டிமீட் டர், கின்னகோரை பகுதியில் 6.4 சென்டி மீட்டர், கோத்தகிரியில் 6.4 செ.மீ , கீழ்  கோத்தகிரியில் 8.1 செ.மீ, தேவாலா குதி யில் 6.2 செ.மீ, பந்தலூர் பகுதியில்  6.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து இருக்கும் நிலை யில் அடுத்த சில தினங்களுக்கு தொட ரும் என கூறப்படுகிறது. இதனைய டுத்து கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முன் னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட் டுள்ளன.  இந்நிலையில், கோவை மாவட்டத் தில் சனியன்று பரவலாக கன மழை  பெய்தது. ஓரிரு இடங்களில் வீடுகளுக் குள் வெள்ளம் புகுந்தது. சாலையில் ஓடிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். குறிப்பாக ஆலந்துறை செம்மேடு பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளது. அதேபோன்று கவுண் டம்பாளையம் பகுதியில் பெய்த மழை யினால் சாலைகளில் மழை நீர் தேங்கி  அனைத்து வாகனங்களும் பாதி அள வுக்கு நீருக்குள் மூழ்கின.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள இருசக்கர வாக னங்கள் நிறுத்தும் இடத்தில் அமைக் கப்பட்டு உள்ள இரும்பினாலா ஆன  மேற்கூரை திடீரென சரிந்து விழுந்து  விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு நிறுத்தி  வைக்கப்பட்டு இருந்த அரசு ஊழியர் களின் 5 இருசக்கர வாகனம் சேதம்  அடைந்தன. மேலும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு கொடுக்க  வரும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள்  மற்றும் செய்தியாளர்கள் அப்பகுதி யில் நிற்பது வழக்கம். நல்வாய்ப்பாக அந்த பகுதியில் யாரும் நிற்கவில்லை  என்பதால் உயிர் சேதம் போன்ற பாதிப்பு கள் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து, தீயனைப்புத்து றையினர் விரைந்து வந்து, சரிந்து விழுந்த மேற்கூரையை அகற்றி வாக னங்களை மீட்டனர்.

;