districts

img

வாகன நிறுத்துமிடம்: அதிகாரிகள் குழு ஆய்வு

ஊட்டி, ஜூலை 9- பைக்காரா படகு இல்லம் அருகே வாகன  நிறுத்துமிடம் அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் குழுவினர் சனியன்று ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் சுமார் 22 கிலோ  மீட்டர் தொலைவில் வனப்பகுதிக்கு மையப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் அமைந் துள்ளது. பைக்காரா படகு இல்லம். தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நிர்வகித்து வருகிறது. இங்கு வழக்கமான நாட்களில் சுமார் 5000 பேரும், வார இறுதி நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேரும் வருகின்றனர். இவ் வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ச்சி  அடைகின்றனர்.  இந்நிலையில், கூடலூர் செல்லும் தேசிய  நெடுஞ்சாலையில் இருந்து படகு இல்லத் திற்கு  செல்லும் சாலை வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது. படகு இல்லம் செல்வ தற்கு வனத்துறை மூலம் நுழைவு கட்டணமும்  வசூலிக்கப்பட்டு  வருகிறது. ஆனால் இந்த  சாலை மிகவும் குண்டும், குழியுமாக மோச மாக இருப்பதால், இந்த சாலையை சீர மைக்க வேண்டுமென சுற்றுலா வாகன ஓட்டு நர்களும், சுற்றுலாப் பயணிகளும் நீண்ட  காலமாக கோரிக்கை விடுத்து வருகின் றனர். இதனையடுத்து, இந்த சாலையை சீர மைக்க சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத் தின் மூலம் தற்போது ரூ.3 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால்,  இதற்கான பணிகள் இன்னமும் தொடங்க வில்லை.

தற்போது நீலகிரி மாவட்டத் தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி யுள்ளதால்,  தற்போது சாலை அமைக்கும் பணி துவங்க சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மழைக்காலம் முடிந் தவுடன் இந்த சாலையை உடனடியாக சீர மைத்துத் தரவேண்டும் என வாகன ஓட்டு நர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பைக்காராவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்  வாகனங்களை நிறுத் துவதற்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்தன. இதையடுத்து, அதற்கான இடம்  தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம்  தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி,  ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் செல்வகுமார் தலை மையில், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா  சங்கர், சுற்றுலா வளர்ச்சிக்கழக மண்டல மேலாளர் யுவராஜ், வட்டாட்சியர் மணி மேகலை ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் பைக்காரா படகு இல்லம் அருகே  வாகன நிறுத்துமிடத்திற்கான இடத்தினை ஆய்வு மேற்கொண்டனர்.  இது குறித்து சுற்றுலாத்துறை அதி காரிகள் கூறுகையில், முதல் கட்டமாக இடம்  கேட்டு வனத்துறைக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. இடம் கிடைத்தவுடன் அதற்கான  தொகை ஒதுக்கப்பட்டு, எத்தனை வாகனங் கள் நிறுத்தப்படும் என்பது உள்ளிட்ட பணிகள்  இரண்டாம் கட்டமாக நடத்தப்படும் என் றனர். 

;