கோவை, ஆக. 12- கோவையில் நடைபெறும் சுதந்திர தினவிழா கொண்டாட் டத்தை சிறப்பாக நடத்தும் வகையில் இதன் இறுதிகட்ட ஒத்தி கைகள் வஉசி மைதானத்தில் நடைபெற்றது. ஆகஸ்ட 15 ஆம் தேதியன்று நாடு முழுவதும் 78 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழாவில் வாஹா எல்லையில் இந்திய இராணுவத் தினர் அணிவகுப்பும் அதே இடத்தில் நடைபெறும் பாகிஸ் தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பும் நடைபெறும் ஒரு சேர பார்க்கும் போது உணர்ச்சி பூர்வமிக்க நிகழ்ச்சியா கவும் இருக்கும். அந்த அணிவகுப்பை போலவே கோவையிலும் இம் முறை நடத்த ஆயுதப்படை போலிசார் முடிவு செய்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதன்முறையாக வாஹா எல்லையில் நடை பெறும் அணிவகுப்பை போலவே நடத்த திட்டமிடப்பட் டுள்ளது. இதற்கான இறுதி கட்ட ஒத்திகைகளில் கோவை மாநகர ஆயுதப்படை காவல் துறையினர் திங்களன்று தீவி ரமாக ஈடுப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாஹா எல்லையில் பயிற்சி பெற்ற கமாண்டோ அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர். இதைபோன்று, ஈரோடு மாவட்டம், ஆணைக்கல்பாளை யம், ஆயதப்படை வளாகத்தில், மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்றது.