districts

img

இன்ஜினியரிங் தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்க பெயர் பலகை திறப்பு

திருப்பூர், அக்.3- திருப்பூர் மாவட்ட சிஐடியு இன்ஜினியரிங்  தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்க பெயர்  பலகை திறப்பு விழா பல்லகவுண்டம்பாளை யத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுக்கா, பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள தோழர் கே.ரமணி நினைவகத்தில், திருப்பூர் மாவட்ட இன்ஜினியரிங் தொழிலா ளர் சங்கம் என்று இருந்ததை, திருப்பூர் மாவட்ட இன்ஜினியரிங் தொழிலாளர் மற்றும்  ஊழியர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டது. இன்ஜினியரிங் சங்கத் தலைவர் ஆர். பழ னிசாமி தலைமையில் அக்டோபர் 2ஆம் தேதி,  பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று  விழா நடைபெற்றது. சிஐடியு திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.ரங்க ராஜ் கொடியேற்றி இவ்விழா வை துவக்கி வைத்தார். நல வாரிய பதிவு மையப் பெயர்  பலகையை, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக் குளி தாலுகா செயலாளர் எஸ். கே.கொளந்தசாமி திறந்து  வைத்தார். அலுவலக பெயர்  பலகையை தமிழ்நாடு விவ சாய சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார்  திறந்து வைத்தார்.  மறைந்த தோழர்கள் கே.தங்கவேல், பி. முருகேசன், எஸ்.என்.பழனிசாமி, என்.ஆறு முகம், எஸ்.பி.தெய்வசிகாமணி ஆகியோ ரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. எஸ்.ஏ.சி.எல். நிறுவனத்தின் நுழைவுவா யில் முன்பு சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி சங்க கொடியேற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் பெயர் பலகை திறந்து வைத்தார். சிஐடியு இன்ஜினி யரிங் சங்கச் செயலாளர் ஜெ.கந்தசாமி உள் பட, இவ்விழாவில் 80 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகிகளில் ஒரு வரான ஆர்.சிவராஜ் நன்றி கூறினார்.

;