districts

img

கோவை மலையாள பண்பாட்டு மேடையின் துவக்க விழா

கோவை, செப்.25- கோவை மலையாள பண்பாட்டு மேடை துவக்க விழா மற்றும் ஓணம் திருவிழா ஞாயிறன்று நடைபெற்றது. கோவை மலையாள பண்பாட்டு மேடை துவக்க விழா மற்றும் ஓணம் திருவிழா காந்திபுரம் பகுதியிலுள்ள கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் ஞாயிறன்று கே.சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரளா முன்னாள் கல்வி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சருமான எம்.ஏ.பேபி உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தபசயமுர்தம் என்ற அமைப்பின் இயக்குநர் ஜோதி ஹரிஹரன்-க்கு நாட்டிய கீதா விருது வழங்கப்பட்டது. இதில், கோவை மலையாளி சமாஜத்தின் தலைவர் கே.ராஜகோபாலன், கோவை ஆர்ய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குநர் தேவிதாஸ் வாரியார், ஜிஎஸ்டி மாநில வரி அலுவலர் கே.எஸ்.பிரபாத், கோவை அரசு கலைக்கல்லூரியின் இணை பேராசிரியர் பி.ஆர்.ரமணி, சிஎம்எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் இணை பேராசிரியர் ஜி.சுஜாதாபாய், எப்சிஎம்ஏ அமைப்பின் ஆரம்ப தலைவர் சி.வி.சன்னி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பாலக்காடு சேகரிபுரம் மாதன் கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல் மற்றும் தபசயமுர்தம் கலைக்குழுவின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக, பி.சந்திரன் நன்றி கூறினார்.

;