districts

img

வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

கோவை, ஜூலை 9- வாலிபர் சங்கம் சார்பில் அன்னூர் அருகே நடைபெற்ற ரத்ததான முகாமில், 53 யூனிட் ரத்தம் கொடையாக வழங் கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அன்னூர் ஒன்றிய குழு மற்றும் கோவை அரசு பொது மருத்துவமனை இணைந்து,  பொன்னேகவுண்டன்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஞாயிறன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க கிளை தலைவர் சரண்ராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னூர் பேரூராட்சி கவுன் சிலர் மணிகண்டன் முகாமினை துவக்கி வைத்தார். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அர் ஜூன், மாவட்ட பொருளாளர் தினேஷ்ராஜா, மாவட்ட செயற் குழு உறுப்பினர் தீபிகா, மாவட்டக்குழு உறுப்பினர் ரமேஷ், ஒன்றிய தலைவர் பிரதீப் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.  68 பேர் நபர்கள் ரத்ததானம் கொடையாக வழங்க முன் வந்து, மருத்துவ பரிசோதனைக்கு பின், 53 யூனிட் ரத்தம் சேகரிக்கப் பட்டன. முடிவில், சிவா நன்றி கூறினார்.