districts

img

தடுப்பணைகள்: ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், செப்.29  -  நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 11.43 கோடியில் கட்டப் படும் 27 தடுப்பணைகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்  ஆய்வு செய்தார்.  நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், கொல்லி மலை அடிவாரப் பகுதியான பொம்மசமுத்திரம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சம்பூத்து ஓடை மற்றும் கருவட்டாற்றின் பல்வேறு இடங்களில் கட்டப்படும் தடுப்பணைகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.  இதனைத்தொடர்ந்து ஆட்சியர் கூறுகையில், நாமக்கல்  மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில்  கடந்த ஓராண்டில் எலச்சிபாளையம் வட்டாரத்தில் 2 தடுப்ப ணைகள், எருமப்பட்டியில் 16, கபிலா்மலையில் 2,  கொல்லிமலையில் 43, நாமக்கல்லில் 14, நாமகிரிப் பேட்டையில் 16, புதுச்சத்திரத்தில் 14, சேந்தமங்கலத்தில் 15,  திருச்செங்கோட்டில் 5 என மொத்தம் ரூ.11.43 கோடி மதிப் பீட்டில் 127 தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. இதுவரை  44 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள  தடுப்பணைகள் கட்டும் பணிகள் விரைந்து நடைபெறுகிறது. தடுப்பணைகள் கட்டப்படுவதால் மழைக்காலத்தில் பெய்யும்  மழைநீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீா்மட்டம் உயர வழி வகை செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

;