districts

img

உலக பருவநிலை மாற்றத்தால் பருத்தி விளைச்சல் பாதிப்பு

ஜவுளி உற்பத்திக்கு மூலப்பொருளாக இருக் கும் பருத்தி விளைச்சல் உலக அளவில் ஏற்பட்டு  வரும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்நாட்டு ஜவு ளித் தொழிலைப் பாதுகாக்க ஒன்றிய அரசு முன் னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இத்தொழில் துறை சார்ந்த வல் லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச பஞ்சு தட்டுப்பாடு சீனா, இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் முக்கிய பருத்தி  விளைவிக்கும் நாடுகளாக உள்ளன. இந்நாடுக ளில் வெவ்வேறு வகையான வானிலை பாதிப்பு கள் ஏற்பட்டுள்ளன. எனவே வரும் நாட்களில், ஆடை மற்றும் ஜவுளித்துறையின் முக்கிய மூலப் பொருளான பஞ்சு விநியோகத்தில் பெரும் தடங் கல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக ஆய்வா ளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் கனமழை மற்றும்  பூச்சி தாக்குதல்களால் பருத்தி விளைச்சல் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இங் குள்ள ஜவுளித் தொழில்களின் தேவையை ஈடு  செய்ய, வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்கு மதி மூலம் விநியோகத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  மறுபுறம், சீனாவில் கடுமையான வெப்பம் காரணமாக, வரவிருக்கும் பருவத்தில் பருத்தி  உற்பத்தி வெகுவாகக் குறையும் என்று கவலை  ஏற்பட்டுள்ளது. அதேபோல் பருத்தி உற்பத்தி யின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ள  அமெரிக்காவில், பருத்தி விளையும் பகுதிகளில்  கடும் வறட்சி நிலவுகிறது. இரண்டாவது பெரிய  பருத்தி ஏற்றுமதியாளரான பிரேசிலும், அதிக வெப்பம் மற்றும் வறட்சியுடன் தொடர்ந்து போராடி வருகிறது.

குறிப்பாக, உலக பருத்தி ஏற்றுமதியில் அமெ ரிக்கா, பிரேசில் நாடுகள் பங்கு சரிபாதியாக உள் ளன. தற்போது இரு நாடுகளும் பாதகமான வானி லையால் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த  நாடுகளில் பருத்தி ஏற்றுமதி குறையும்போது சர்வதேச பருத்திச் சந்தையில் விலை கடுமை யாக உயரும். தற்போது சர்வதேச விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.  நடப்பாண்டில் இதுவரை 30 சதவீதம் வரை  விலை அதிகரித்துள்ளது. பருத்தி விலை 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு, 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மிக உயர்ந்த அளவை எட்டி யது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெய்து வரும் கனமழையால் பருத்தி  கையிருப்பு கவலை அளிக்கும் அளவுக்கு குறைந்துவிட்டது என்றும் இத்துறை சார்ந்த வல் லுநர்கள் கூறுகின்றனர்.  கேள்விக்குறியாகும் திருப்பூர் “மிக மோசமான வானிலை காரணமாக, பருத்தி சந்தை தள்ளாடத் தொடங்கி இருப்பது,  பின்னலாடைத் தொழில் துறையினரை கவலை யில் ஆழ்த்தி உள்ளது என்று திருப்பூர் ஏற்றும தியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா)  தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறி இருக்கி றார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், உலக  அளவில் பிரசித்தி பெற்ற பின்னலாடை நகரம்  திருப்பூர். இந்தியாவில் பின்னலாடை என்றாலே  திருப்பூர்  தான் பிரதான அடையாளமாக உள் ளது. ஆனால் தற்போது இந்த தொழிலில் ஏற்பட் டுள்ள பின்னடைவுகள் தொழிலை சோர்வுற வைத்துள்ளது. ‘குட்டி ஜப்பான்,’  ‘டாலர் சிட்டி’,  ‘வந்தோரை  வாழ வைக்கும் நகரம்’ ஆகிய சொல்லாடல்கள் திருப்பூரைக் குறிக்கும் என்பது அனைவரும் அறிந்தததே. இன்றைய தொழிலாளி, நாளைய  முதலாளியாக மாறுவார் எனச் சொல்லும் நிலை  தற்போது இன்றைய முதலாளி நாளைய தொழி லாளியாக தலை கீழாக மாறக்கூடியதாக உள்ளது. ஆனால் இந்த நகரில் தற்போது ஏற்பட் டுள்ள சூழ்நிலை மாற்றம் மிக மோசமாக உள் ளது. தொழில்துறை மீது அக்கறை உள்ள பலரை யும், பயத்தில் ஆழ்த்தி உள்ளது. லட்சக்கணக் கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள் விக்குறியாகும் சூழலில் பின்னலாடைத் தொழில் உள்ளது. ஆளும் அரசுகள் கண்டு கொள்ளாமல் இருப்பதே இதற்கு முக்கிய கார ணம்.

இந்தியாவில் உள்ள நூற்பாலைகளில் ஏறத் தாழ 45 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உள்ளன.  தமிழகத்தில் முக்கியத் தொழிலாக ஜவுளி  தொழில் விளங்குகின்றது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் செய்ப வர்கள் ஏராளம். கடந்த பல ஆண்டுகளாக மூலப் பொருட்கள் விலையேற்றத்தால், ஒட்டுமொத்த ஜவுளி தொழிலே பாதித்துள்ளது. போதிய பருத்தி உற்பத்தி இருந்தும் இந்த நிலை இருப் பது தான் நமது வேதனையாக உள்ளது. பருத்தி யைப் பதுக்கி செயற்கை விலையேற்றம் இடைத்தரகர்களால் இந்தியாவில் ஏற்படுத்தப்ப டுகிறது. இந்தியாவின் ஜவுளி உற்பத்தி தேவைக்கு முன்னுரிமை கொடுக்காமல், பருத் தியை ஏற்றுமதி செய்வதும், நூல் ஏற்றுமதி செய் வதும் சில நிறுவனங்களுக்கு முக்கியத் தொழி லாக உள்ளது . இதை அரசு கண்டு கொள்வ தில்லை. இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் திருப் பூரில் உள்ள 90 சதவீதம் சிறு, குறு தொழில் செய்ப வர்களின் வாழ்வாதாரம் முழுமையாக அழி யும். திருப்பூரில் உள்ள அனைத்து ஜாப் ஒர்க்   நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். தொழிலா ளர்கள் வேலை இன்றி தவிக்கும் நிலை உருவா கும்.

அரசுக்கு ஜிஎஸ்டி குறையும். மத்திய,மாநில  அரசுகள் தனிக்குழு அமைத்து, இத்தொழிலை காத்திட வகை செய்ய வேண்டும். அனைத்து உற் பத்தியாளர்களும், அதை சார்ந்துள்ள ஜாப்  ஒர்க் அமைப்புகளும், தொழிலாளர்கள் அமைப் புகளும் ஒன்றிணைந்து மத்திய, மாநில அரசுக ளின் கவனத்துக்கு கொண்டு சென்று வலியுறுத்த  வேண்டும். இல்லையென்றால், திருப்பூரின் அடையாளத்தை இழக்கும் நிலை ஏற்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். உலகளாவில் பருத்தி விளைச்சல் பாதிப்பு  ஏற்படுவது ஏற்கெனவே வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக, வரக்கூடிய நாட்களில்  இத்தொழிலை மேலும் பாதிக்கக்கூடிய அச்சு றுத்தல் உள்ளது. எனவே ஒன்றிய அரசும், மாநில  அரசும் முன்னெச்சரிக்கை உணர்வுடன், முன்கூட் டியே திட்டமிட்டு, உள்நாட்டு தேவைக்கான பருத்தி கொள்முதலுக்கு உரிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். அதன் மூலம்தான் பாதிப் பின் தீவிரத்தைக் குறைப்பதுடன், குறைந்தபட்ச  பாதுகாப்பை இத்தொழிலைச் சார்ந்தவர்க ளுக்கு வழங்க முடியும் என்றும் இத்துறையினர்  கூறுகின்றனர். (ந.நி)

;