districts

img

சட்டவிரோதமாக மூடப்பட்ட தொழிற்சாலை: சிஐடியு போராட்டம்

சேலம், ஜூன் 22- ஓமலூர் அருகே தொழிலாளர் சட்டங் களை மதிக்காமல் தொழிற்சாலை மூடப் பட்ட சம்பவத்தை கண்டித்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செல்லப்பிள்ளை குட்டை பகுதியில் இயங்கி  வரும், ‘இந்தியன் மேப் கப்புள்ஸ்’ நிறுவனத் தில் சுமார் 120க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணியாற்றி வருகின்றனர். மேக்ன சைட் கல்மாவிலிருந்து கப்புகள் தயாரிக்கப் படும் தொழிற்சாலையாக இந்நிறுவனம் கடந்த 8 வருட காலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ஆலை நிர்வாகம் தொடர்ந்து தொழிலாளர் விரோதபோக்குடன் செயல் பட்டு, தொழிற்சங்க விதிகளை பின்பற்றா மல் செயல்பட்டு வந்தது. இதைக் கண்டித்து தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த  நிலையில், அடாவடியாக 31 தொழிலாளர் களை ஆலை நிர்வாகத்தினர் பணி நீக்கம் செய்தனர். தற்போது ஆலையை மூடி, தொழி லாளர்களுக்கு எதிராக ஆலை நிர்வாகத்தி னர் செயல்பட்டு வருகின்றனர். இதனைக் கண்டித்து சிஐடியு தலைமையில் பாதிக்கப் பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட் டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், மாநிலக்குழு உறுப் பினர் ஆர்.வெங்கடபதி, டி.பன்னீர்செல்வம், ஆலை செயலாளர் பெரியசாமி, தலைவர் சுரேஷ் மற்றும் சிஐடியு சாலை போக்குவ ரத்து சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் உட்பட பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.