districts

img

திருப்பூர் கல்வி மாவட்டத்தில்  இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் நடுநிலைப் பள்ளி தேர்வு

தமிழகத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக, திருப்பூர் கல்வி மாவட்டத்தில்  இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் நடுநிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டது.  சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், சிறந்த பள்ளிக்கான  விருதினை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிர மணியத்திடம் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி வழங்கினார்.