வெடி வைப்பதால் வீடுகள் சேதம் - கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகை
சேலம், ஜூலை 14- ஓமலூர் அருகே வெடி வைப்பதால் வீடுகள் சேதமடை வதாக புகார் தெரிவித்து, கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள சங்கீதப்பட்டி ஊராட்சியில் வெத்தலைக்கரனூர் கிராமம் உள்ளது. இக் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாய கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள் மற்றும் மக்கள் நெருக்கம் நிறைந்துள்ள இப்பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இக்குவாரியில் எந்தவித பாது காப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் வெடி வைத்து பாறைகளை தகர்த்து எடுக்கின்றனர். அவ்வாறு வெடி வைக் கும்போது சிதறும் பாறை கற்கள் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. மேலும், கால்நடைகள் அதிகளவில் பாதிக்கப் பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. கல்குவாரியில் வைக் கப்படும் வெடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பாதிக் கப்பட்டு வரும் கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பலமுறை புகரளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்நிலையில், வியாழனன்று மாலை கல்குவாரியில் பாறைக்கு வெடி வைத்து தகர்த்துள்ளனர். அப்போது சிதறிய கற்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத் தியது. மேலும், அங்கிருந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி காயப்படுத்தியது. இதனால், ஆவேச மடைந்த அப்பகுதி மக்கள் கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆபத்தான முறையில் பாறை களை வெடி வைத்து தகர்க்கக்கூடாது என்று குவாரி நிர்வா கத்திடம் கூறினர். இங்கு வைக்கப்படும் வெடி எங்கள் உயிருக்கு பாது காப்பு இல்லாத நிலையை ஏற்படுத்து கிறது. பகல் நேரத்தில் கற்கள் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே விழுகிறது. அப்போது யாராவது வீட்டில் இருந்திருந் தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றுக்கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி தலைவர் ராஜாமணி பொதுமக்களுக்கு ஆதரவாக, சுற்றிலும் குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் பாறை களுக்கு வெடி வைத்து குவாரி செயல்படுவதால் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர். அதனால், இங்குள்ள மக்களின் உயிரை காக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர், கனிமவளத்துறை அதிகாரிகள், சுற்றுசூழல் துறை அதிகாரி கள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயித்திடுக
உதகை, ஜூலை 14- தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்காவிட்டால் 65 ஆயிரம் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக நாக்கு பெட்டா சங்கத்தினர் தெரி வித்தனர். நீலகிரி மாவட்டத்தில் 1,33,000 ஏக்கர் தேயிலை, 17,000 ஏக்கர் பரப்பளவில் காபி, 2,400 ஏக்கர் பரப்பளவில் மிளகு, 2000 ஏக்கரில் ஏலக்காய், 17,000 ஏக்கர் பரப்பளவில் மழை காய் கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. இதில், தேயிலை விவசாயத்தில் மட்டும் சுமார் 65 ஆயிரம் விவசாயி கள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் தவிர கூலித் தொழி லாளர்கள் உட்பட மறைமுகமாகவும், நேரடியாகவும் சுமார் 4 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். வட இந்தியாவில் அசாம் தேயிலையை போல் தென்னிந்தியாவில் நீலகிரி தேயிலை மிக சிறப்பு வாய்ந்ததாகும். அப்படிப்பட்ட தேயி லுக்கு கடந்த 40 வருடங்களாக சரியான விலை கிடைப்பது கிடையாது. இதனால் விவசாயிகள் பலர் விவசாயம் மேற் கொள்ள முடியாமல் திணறுகின்றனர். இந்நிலையில், நாக்குபெட்டா நலச் சங்கத் தேயிலை தூள் பாதுகாப்பு பிரிவு அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தொதநாடு நலச் சங்க தலைவர் பாபு தலைமை ஏற்றார். மேற்கு நாடு நலச் சங்க தலைவர் தாத்தன், புறங்காடு சீமை தலைவர் தியாகராஜன் உள்பட 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறிய தாவது, குன்னூரில் நடந்த ஏலத்தில் தேயிலை கிலோ ரூ. 14 விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் 75 சதவிகிதம் மட்டுமே தேயிலை தூள் விற்பனையானது. 25 சதவிகிதம் தேங்கி விட்டது. தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கு ரூ.22.50 செலவாகிறது. அதிலிருந்து 50 சதவிகிதம் கூடுதலாக நிர்ணயம் செய்து ரூ.33.75 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என சாமிநாதன் கமிட்டி அறிக்கை அளித்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே, வருகிற 31ஆம்தேதிக்குள் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படி குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யாவிட்டால் அடுத்த மாதம் ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று மாவட்டத்தில் உள்ள 65 ஆயிரம் தேயிலை விவசாயிகளை உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்பூர், ஜூலை 14- திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றி யம் நல்லகாளிபாளையம் சமுதாய கூடத்தில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 181 பய னாளிகளுக்கு ரூ.79.91 லட்சம் மதிப்பீட்டில் பல் வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருப் பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இணை இயக்குனர் மாரியப்பன், தனித்துறை ஆட்சியர் செல்வி, மாவட்ட வழங்கள் அலுவலர் மகாராஜ், திட்ட இயக்குனர் வரலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் வியாஸ் அகமதுபாஷா, தாட்கோ மேலாளர் ராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவ லர் ரஞ்சிதா தேவி, திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் புனித வதி, ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கனகராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அணைகளின் நிலவரம்
அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:21.91/60அடி நீர்வரத்து:கனஅடி வெளியேற்றம்:28கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்: 46.46/90அடி.நீர்வரத்து:252கனஅடி வெளியேற்றம்:320கனஅடி
பொது ஏலம்
திருப்பூர், ஜூலை 14- திருப்பூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, தாலுகா காவல் நிலை யங்கள் மற்றும் திருப்பூர் மாந கர தாலுகா காவல் நிலையங் களில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட நான்கு சக் கர வாகனங்கள் 17 மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் 34 உட்பட மொத்தம் 51 வாகனங்கள் வரும் ஜூலை 25 ஆம் தேதி பகல் 10 மணியளவில் ஏலம் விடப் படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவி நாசி மடத்துக்குளம் சாலை யில் அமைந்துள்ள திருப்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரி வில் பொது ஏலம் விடப்படு கிறது, பொது மக்கள் பய்ன்ப டுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அழைப்பாணையை ஏற்க மாட்டோம்
கோவை, ஜூலை 14- ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு அனுமதியளித்து விட்டு, பின்னர் வழக்கு போடும் முறையை கோவை மாநகர காவல்துறையினர் மேற்கொள்கின்றனர். இதனை ஒரு போதும் ஏற்க மாட்டோம், நீதிமன்ற அழைப்பாணையை ஏற்கா மல் சிறை செல்ல தயராவோம் என கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தபெதிக உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் மனு அளித்தனர். 2022 ஆம் ஆண்டு ரயில்வே அலுவலக தேர்வுக்கு தமிழ் நாட்டு இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். அந்த இளை ஞர்களுக்கு வட மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டது. இதனை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழ கம் உட்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த னர். மேலும், தேர்வு மையம் தமிழ்நாட்டிலேயே அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற் றது. அதேபோல் காசி தமிழ் சங்கமத்திற்கு செல்ல இலவச ரயில் இயக்கப்பட்டன. இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கோவையிலிருந்து ரயில்கள் இயக் கப்பட வேண்டும் என தபெதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்நிலையில், அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடை பெற்றதாக கூறி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் அழைப் பாணை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை காவல்துறையினர் ஆர்ப்பாட்டத் திற்கு வாய்மொழியாக அனுமதி அளித்தனர். ஆனால் தற் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அழைப் பாணை வந்துள்ளதை ஏற்க மாட்டோம். பிடியாணை பிறப்பிக் கப்பட்டால் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம் எனக் கூறி கோவை மாநகரக் காவல் ஆணையாளரிடம், தந்தை பெரி யார் திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சியினர் மனு அளித்தனர்.
கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
உதகை, ஜூலை 14- தேவர்சோலை அருகே கால்நடைகளை வேட்டையாடி, பொதுமக்களை அச்சமுறுத்தி வரும் புலியை கண்டறிய வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவர்சோலை பேரூ ராட்சிக்குட்பட்ட தேவன்-1 பகுதியில் கடந்த சில வாரங்களாக புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொன் றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் கூண்டு வைத்து புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கூட லூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில், வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் தேவன்-1 பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். மேலும், புலி நடமாட்டத்தை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்களை பொருத்தினர். அந்த கேமராக்களை தின மும் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், இதுவரை புலி நட மாட்டம் கேமராக்களில் பதிவாகவில்லை. அது கேமராக் களில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. இருப்பினும் வனத் துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வனச்சரகர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேவன்-1 பகுதியில் 14 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை கேமராக்க ளில் எந்த வனவிலங்குகளின் நடமாட்டமும் பதிவாகவில்லை, என்றார்.