districts

img

தொல்லியல் இலக்கியம் வரலாறு நூல் வெளியீடு

திருப்பூர், ஜூன் 17- திருப்பூரில், தொல்லியல் இலக்கியம் வரலாறு நூல் வெளியீடு செய்யப்பட்டது. திருப்பூர் - பல்லடம் சாலை, தட்டான் தோட்டம் விசா லாட்சி உடனமர் விசுவநாதர் திருக்கோயில் திருக்குட நன்னீ ராட்டு பெருவிழா திங்களன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாதொருபாகனார் அறக்கட்டளைத் தலைவர் புலவர் வே. சுந்தரகணேசன் கலசங்களுக்கு புனித தூய நீர் ஊற்றி விழாவை நடத்தி வைத்தார். இவ்விழாவில் கொங்கு மண்ட லத்தின் தொல்லியலையும், வரலாற்றையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் கடந்த  பத்து ஆண்டுகளாககளாக கண்டுபிடித்து ஆவணப்படுத் திய பெரும் கற்கால சின்னங்கள், நடு கற்கள், கல்வெட் டுக்கள் மற்றும் தமிழர்களின் பண்டைய தாய் தெய்வ வழிபாடு பற்றி 50க்கும் மேற்பட்ட வண்ணப் படங்களுடன், “தொல்லி யல் - இலக்கியம் - வரலாறு”என்னும் அரியதொரு நூலை வெளியிட்டனர். இந்நூலை ஜிபி யான் லேண்ட்மார்க் ஹோட் டல் இயக்குனர் ஜி.பார்த்திபன் வெளியிட, ஶ்ரீஅய் யப்பா தொழில் குழுமத்தின் இயக்குனர் எம்.பாலாஜி பெற்றுக் கொண்டார். ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக் குமார் நூல் அறிமுக உரையாற்றி, நன்றி கூறினார்.