districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இருதய தின விழிப்புணர்வு பேரணி

சேலம், அக்.8- சேலத்தில் நடைபெற்ற இருதய தின விழிப்புணர்வு மிதி வண்டி பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இதயத்தின் பாதுகாப்பு குறித்தும், அதன் அவசியம் குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, உடற்பயிற்சி செய்தல் மூலம் இதயத்தை பாதுகாக்கலாம் என் பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத் தப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தனியார் மருத்துவமனை சார் பில், உலக இருதய தினம் முன்னிட்டு இதயத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் கௌதம் கோயல் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப் பேரணி வின்சென்ட் காந்தி சாலை, அஸ்தம்பட்டி, கோரிமேடு, ஏற்காடு மலை அடிவாரம் வரை சென்று, 20 கிலோ மீட்டர் கடந்து மீண்டும் காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. அப்போது பேரணியில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இதயத்தை பாதுகாக்க உடற்பயிற்சி அவசியம் குறித்த பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர். இதைத்தொடர்ந்து பங்கேற்ற அனை வருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

வறண்டு காணப்படும் வாணியாறு அணை

தருமபுரி, அக்.8- பருவமழை பொய்த்துப் போனதால் வாணியாறு அணை வறண்டு காணப்படுகிறது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த சேர் வராயன் மலை ஏற்காடு அடிவாரத்தில் 65 அடி கொள்ளளவு கொண்ட வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த  அணையின் மூலம் வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி, தேவராஜபாளையம், மெணசி, பூதநத்தம், தென்கரைக் கோட்டை, அலமேலுபுரம், அதிகாரப்பட்டி, பள்ளிப்பட்டி கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட 17 கிராமங்களில் 10  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அணையில் தண்ணீர் அதிகளவில் இருக்கும்போது சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இந் நிலையில், தற்போது பருவமழை பொய்த்ததால் அணையில் போதிய அளவில் தண்ணீர் இருப்பு இன்றி அணை வறண்டு காணப்படுகிறது. அதன்படி, சனியன்று  மாலை 6 மணி நிலவரப் படி அணையின் நீர்மட்டம் 28 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 39 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையின் மூலம் விவசாயம் செய்ய காத்து கொண்டி ருந்த விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பாக்கு, மஞ்சள், கரும்பு, நெல், சாகுபடி செய்து வந்தனர். தற் போது மழை இல்லாததாலும், அணையில் தண்ணீர் குறைந்து விட்ட காரணத்தினாலும் பயிர்கள் சாகுபடி பரப்பளவும் குறைந் துள்ளது. இதனால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங் கள் தரிசு நிலமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மயில்களால் பயிர்கள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

தருமபுரி, அக்.8- மயில்களின் பெருக்கத்தால் விளை பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரூர் உதவி ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது. உதவி ஆட்சி யர் வில்சன் ராஜசேகர் தலைமை வகித் தார். இக்கூட்டத்தில் அரூர், மொரப் பூர் மற்றும் கடத்தூர் சுற்றுவட்டார பகு திகளில் விவசாயிகளின் நலன் கருதி ஈச் சம்பாடி மற்றும் தாமலேரிப்பட்டி நீரேற்று திட்டங்களை விரைவாக நிறை வேற்ற வேண்டும். மயில்களின் பெருக் கத்தால் விவசாய நிலங்களில் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த பிரச்ச னைக்கு தீர்வு காண வனத்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் நிலத்தை அளந்து உட் பிரிவு செய்து தர விவசாயிகள் பதிவு துறையில் கட்டணம் செலுத்தி பதிவு செய்தாலும், கிராம நிர்வாக அலுவலர் கள் உட்பிரிவு செய்து தருவதில்லை. நிலத்தை அளந்து தரக்கோரி விண் ணப்பித்தவர்களின் பதிவு மூப்பு பட்டி யலை வட்டாட்சியர் அலுவலகங்களில்  ஒட்டி வைக்க வேண்டும். தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப் படுவதை தடுக்க ரேசன் கடைகளில் தக் காளியை விற்பனை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கள் வலியுறுத்தினர். இதன்பின் உதவி ஆட்சியர் ஆட்சி யர் வில்சன் ராஜசேகர் பேசுகையில், நிலங்களை அளவீடு செய்வது தொடர் பாக முன்னுரிமை பட்டியலை ஒட்டுவது குறித்து வருவாய் துறை அலுவலர் கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரி வித்துள்ள பல்வேறு கோரிக்கைகளை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண்ப தற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் வட்டாட்சியர் பெருமாள், வள்ளி, உதவி  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இளஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறைதீர்க்கும் முகாம்


ஈரோடு, அக்.8- ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரம், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மெட்ராஸ் இராணுவ பயிற்சி நிலை யம், வெலிங்டன் சார்பில் நடைபெற்ற முன்னாள் முப்படை  வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற் றது. இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால்  சுன்கரா கலந்து கொண்டு பேசியதாவது, இந்திய நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டு ஓய்வு பெற்றுள்ள முப்படை வீரர்க ளுக்கு எனது வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். இம்முகாமில் முப்படை வீரர்களுக்கான ஆதார் திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாமும், இலவச பொது மருத்துவ முகா மும் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக உள்ள கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறையின் சார்பில், பட்டா  திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் தொடர்பாக விண்ணப்பங்கள் முப்படை முன்னாள் வீரர்களிடமிருந்து பெறப்பட்டன, என்றார்.

நங்கவள்ளியில் நாளை மின்தடை

சேலம், அக்.8- நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் செவ்வாயன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்க னூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப் பட்டி, தானாவதியூர், செல்லக்கல் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஓமலூர் மின்வாரிய செயற் பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

யோகா பயிற்றுநர் மரணம்: மனைவி புகார்

கோவை, அக்.8- ஆழியார் அணை பகுதியில் யோகா பயிற்றுநர் உயிரி ழந்து கிடந்த சம்பவம் குறித்து, அவரது மனைவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த ஆழியார்  பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (35). இவரது கணவர் விஸ்வ நாதன் (45). விஸ்வநாதன் யோகா பயிற்றுநராகவும், திவ்யா  லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலை யில், திவ்யா வழக்கம் போல பணிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு கணவர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் அவரை தேடியுள்ளார். இந்நிலையில், ஞாயிறன்று காலை அதேபகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள், விஸ்வநாதன் ஆழியார் அணை பகுதியில் உள்ள தண்ணீரில் இறந்து கிடப்பதாக திவ்யாவிற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா அணை பகுதிக்கு சென்று, கண வரை பார்த்து கதறி அழுதார். மேலும், எனது கணவர் உயிரி ழப்பில் சந்தேகமாக உள்ளது எனக்கூறி ஆழியார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தை பெரியார் 125ஆவது பிறந்த தினம் குருதிக்கொடை முகாம்

கோவை, அக்.8- தந்தை பெரியாரின் 125ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஞாயிறன்று குருதிக்கொடை முகாம் நடை பெற்றது. கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்ப கத்தில் பெரியாரின் 125 ஆவது பிறந்த நாளையொட்டி ஞாயிறன்று குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இம் முகாமில், 35 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.  இந்த நிகழ்வில், கோவை மாநகராட்சி துணை மேயர்  வெற்றிச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயலாளர் சிவசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் யு.கே. சிவஞானம், திராவிட தமிழ்  கட்சி நிர்வாகி வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை ரவிக் குமார், தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாகி இளவேனில், தமிழ் நாடு திராவிட சுயமரியாதைக் கழக நிர்வாகி நேரு தாஸ்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாநகரச் செய லாளர் குரு, மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகி மூர்த்தி, நாம் திராவிடர் கட்சியின் நிர்வாகி பன்னீர்செல்வம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓணம் கொண்டாட்டம்

கோவை, அக்.8- சூலூரில் ஓணம் பண்டிகையை மலையாள மொழி பேசும் மக்கள் தமிழர்களுடன் இணைந்து கொண்டாடினர். கேரளத்தின் முக்கிய பண்டிகையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா  கொண்டாடப்படுகிறது. கேரள மக்கள் சாதி, மத வேறு பாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளா வில் வாழும் தமிழர்களும் வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.  அந்த வகையில் கோவை மாவட்டம், சூலூரில் கேரள சங்கம் சார்பில் செண்டை மேளங்கள் முழங்க ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில்,  சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலையாளிகள், தமிழர்களுடன் இணைந்து கேரள பாரம்பரிய சிறப்பு விருந்தில் பங்கேற்றனர்.  இதனைத் தொடர்ந்து கேரள பாரம்பரிய கலைஞர் களின் கண்கவர் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மேலும்  கேரள இளம் பெண்கள் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

சேலம், அக்.8- சேலத்தில் மார்பக புற்றுநோய் விழிப் புணர்வு மாதத்தையொட்டி விநாயக மிஷன்  மருத்துவக்கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாத மாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப் பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி சார்பில் மார்பக  புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் கபடி போட்டி நடைபெற்றது. சேலம் குமார சாமிப்பட்டி பகுதியில் மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் துவங்கிய விழிப் புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அருண் கபிலன் கொடிய சைத்து துவக்கி வைத்தார்.  இதில் தனியார் மருத்துவக் கல்லூரி  மாணவ, மாணவிகள் மற்றும் காவல்துறை யினர் ஏராளமானோர் கலந்து கொண்டு  பொதுமக்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  பின்னர், ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் ஏராளமான  பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு  தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.  தொடர்ந்து அனைவருக்கும் பரிசு மற்றும்  சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்  டீன் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.

பாலியல் சீண்டல்: நிர்வாக அதிகாரி, ஆசிரியர் கைது

கோவை, அக்.8- கோவை தனியார்  பள்ளியில் மாணவி களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிர்வாக  அதிகாரி, ஆசிரியர் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கோவை, சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்படும் ஸ்ரீ சைதன்யா பள்ளியில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில்  கணபதி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்  என்பவர் உடற்பயிற்சி ஆசிரியராகவும், கார மடை பகுதியைச் சேர்ந்த முரளிதரன் என்ப வர் பள்ளியின் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலி யல் சீண்டலில் ஈடுபடுவதாக குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்திற்கு மாணவிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  அதன்பேரில் பள்ளிக்கு விரைந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள், மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது ஆசிரியர்களின் அத்துமீறல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து உடற் பயிற்சி ஆசிரியர் மற்றும் பள்ளியின் நிர்வாக  அதிகாரி ஆகிய இருவரையும் போக்சோ சட்ட  பிரிவின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில், மாணவிகளிடம் அத்து மீறிய ஆசிரியர்கள் இருவரையும் சனியன்று  பள்ளியிலிருந்து பணி நீக்கம் செய்ததா கவும், இந்த பிரச்சணை குறித்து தன்னிடம்  மாணவிகள் எந்த தகவலையும் சொல்ல வில்லை என பள்ளி முதல்வர் தெரிவித் துள்ளார். மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவி களிடம் தகாத வார்த்தைகள் பேசுவது, புகைப் படம் பிடிப்பது மற்றும் விளையாட்டு நேரங் களில் சீண்டுவது போன்ற செயல்களில் இரு வரும் ஈடுபட்டு வந்ததாக சுமார் 35  மாணவிகள்  கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளது குறிப் பிடத்தக்கது.