districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பட்டுக்கூடுகளில் கைவினைப்பொருட்கள்

கோவை, ஜூன் 5- தமிழ்நாடு அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டுக்கூடுகளின் மூலம் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடை பெற உள்ளது.

மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு 2024 ஜூன் மாதம் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் பட்டுக்கூடுகளின் மூலம் உற்பத்தி செய்யும் கைவி னைப் பொருட்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் விருப்பம் உள்ள பட்டு விவசா யிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், இப்பயிற்சி வகுப்பு இலவசமாக நடைபெறுகிறது. பயிற்சி முடித்த வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் பயிற்சியில் மதிய உணவு மற்றும் போக்குவரத்து பேருந்து கட்டணம் வனக்கல்லூரி நிர்வாகமே வழங்குகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள கணேஷ் பாண்டி இளநிலை ஆய்வாளர் அன்னூர் தொழில்நுட்ப சேவை மையம் 9092313528 தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

சுற்றுசூழல் தினம்: மரக்கன்றுகள் நட்டு 

தருமபுரி, ஜூன் 5- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் வெயிலின் தாக்க மும், திடீரென்று பொழியும் பலத்த மழையும், மழைக்கா லங்களில் வறட்சியும், இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை நமக்கு உணர்த்துகின்றன. ஆனால், மனித இனம் இப்பிரச்சனையின் முக்கியத்துவம் உணராமல் கடந்து செல்கின்றது. சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப்பார்த்து, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வுகாண்பது குறித்து, சிந்தித்து செயலாற்றுவதற்கான நாளாகவே உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி, தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மரக்கன்றுகள் நட்டு, உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரே சன் லிமிடெட் தொழிற்சாலையில், மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ.நித்ய லட்சுமி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பணியாளர்க ளுக்கிடையே சுற்றுச்சூழல் தொடர்பான போட்டிகள் நடத்தப் பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ் குமார் வருவாய் கோட்டாட்சி யர் காயத்ரி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ.நித்ய லட்சுமி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவிப் பொறியா ளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, கோவை மாவட்டம், தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் தினத் தை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில், பல்கலைக்கழக பதிவாளர் இரா. தமிழ்வேந் தன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள்

நாமக்கல், ஜூன் 5- நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் வேளாண் துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ப.கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, ரசாயனங்களின் பாதிப்பு இல்லாமலும், மண் வளத் தைப் பாதுகாக்கவும் வேண்டி முதல்வரின் மண்ணு யிர் காப்போம் திட்டம் 2024-25 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்ப டவுள்ளது. இத்திட்டத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுப டியை ஊக்குவிக்கும் வகையில் பசுந்தாள் உர விதை கள் விநியோகம் செய்ய ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சாகுபடி முறையில் தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்வதாலும், மண்ணிலி ருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிர்களை சாகுபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. அதிகளவில் ரசாயன உரங்கள், களைக்கொல்லி கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்து வதால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் மண்வளம் குன்றி, அமில நிலங்க ளாக மாறும் சூழலுக்கான வாய்ப்புள்ளது. மண் வளத்தைக் காக்கும் பொருட்டு நிகழாண்டில் விவசாயிகளுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் அனைத்து விவசாயிகள், குத்தகை தாரர்கள் பயன் பெறலாம். ஒரு பயனாளிக்கு அதிகபட் சமாக ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை விலை சரிவு
நாமக்கல், ஜூன் 5- நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ள ன. இங்கு தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய் யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (நெக்), முட்டை விலை யை அறிவித்து வருகிறது. கடந்த ஜூன் ஆம் தேதி முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்த்தி, ரூ.5.35  காசுக்கு விற்பனை செய் யப்பட்டது. தற்போது நடை பெற்ற ‘நெக்’ கூட்டத்தில், முட்டை விலை ஒரே நாளில்,  25 காசு குறைக்கப்பட்டு, ஒரு  முட்டையின் பண்ணை 

பூங்காவில் சுற்றிய கருஞ்சிறுத்தை

உதகை, ஜூன் 5– உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றியது அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவர வியல் பூங்கா மேல்புறத்தை ஒட்டி வனப்ப குதி உள்ளது. வனத்திலிருந்து வெளியேறும் காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரங்களில் பூங்கா பகு திக்கு வந்து சுற்றித்திரிகிறது. சில சமயத்தில் பகல் நேரத்திலேயே உலா வருகிறது. இந்நி லையில், சனியன்று இரவு, பூங்கா நுழைவு வாயில் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று அங்கும் இங்குமாக சுற்றித்திரிவது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து, தோட்டக்கலை உதவி இயக் குனர் பாலசங்கர் கூறுகையில், தாவரவி யல் பூங்காவுக்கு அவ்வப்போது இரவு நேரங் களில் வன விலங்குகள் வந்து செல்கிறது. இந்நிலையில், இரவு நேரத்தில், கருஞ்சி றுத்தை ஒன்று பூங்கா நுழைவு பகுதி யில் சுற்றித்திரிவதை கண்காணிப்பு கேமரா வில் பதிவானது. இதுகுறித்து, வனத்துறை யினர் அங்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும், பூங்காவுக்கு வன விலங்குகள் நுழையாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

சேலம், ஜூன் 5- வாழப்பாடி அருகே மின் இணைப்பை சீரமைக்க மின் கம்பத்தில் ஏறிய மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் பகுதியைச் சோ்ந்தவர் கண்ணன் (43). மின்வாரிய ஊழியரான இவர், செவ்வாயன்று மாலை, அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள மின் கம்பத்தில் ஏறி, பழுதடைந்திருந்த ஒரு கடையின் மின் இணைப்பை சீரமைக்க முயன்றுள்ளார். அப்போது எதிா்பாராதவிதமாக, இவர் மீது உயரழுத்த மின் கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் மயங்கிய நிலையில் மின் கம்பத்திலேயே தொங்கிய இவரை மீட்ட அப்பகுதி மக்கள், சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், மின்விபத்தில் சிக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியர் கண்ணனின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.