districts

img

பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்வே மேம்பால பணி – பொதுமக்கள் அவதி

தருமபுரி, டிச.12-     அதியமான் கோட்டை ரயில்வே கிராசிங்  பாலம் கட்டுமான பணிகள் பாதியில் இருப்ப தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்ற னர்.  தருமபுரி நகரில் வாகனங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. குறிப்பாக, தருமபுரி - அதியமான் கோட்டை ரயில்வே கேட்டில், காலை நேரங் களில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவி கள் நெரிசலில் சிக்கி, சரியான நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. மேலும், தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தில் சிக்கியவர்களை, தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல வும், மேல் சிகிச்சைக்கு சேலம் மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் போதும், அதியமான் கோட்டை ரயில்வே கேட்டில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகவே, இதை தவிர்க்க, அதியமான்  கோட்டை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை யடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு அதிய மான் கோட்டை ரயில்வே கிராசிங்கில் ரூ.9 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி கள் துவங்கப்பட்டது. இதனால், அதியமான் கோட்டை ரயில்வே கிராசிங் மூடப்பட்டு கடந்த 4 வருடமாக மாவட்ட ஆட்சியர்  இல் லம் வழியாக வாகனங்கள் சென்று வரு கின்றன. இதனிடையே, பால கட்டுமான பணிகள் தற்போது பாதியில் நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே கிராசிங் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட நிர் வாகத்தையும், ரயில்வே துறையும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

;