districts

தரமில்லாத குளிர்பானம் குடித்த மாணவி மயக்கம்

சேலம், செப்.21- எடப்பாடி அருகே தரமில்லாத குளிர் பானம் அருந்திய அரசு பள்ளி மாணவி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குளிர்பானம் விற்பனை செய்த விற்ப னையாளர்களுக்கு நகராட்சி அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளியின் அருகே உள்ள சாலையோர கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். இதையடுத்து பள்ளிக்குள் சென்ற மாணவி சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். இத னால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவி அருகில் உள்ள தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக எடப் பாடி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த எடப்பாடி வட்டாட்சியர் லெனின் மற்றும் நகராட்சி அதிகாரி கள், காவல் துறையினர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கி டையே மாணவியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப் பப்பட்டது. இதனைத்தொடர்ந்து நகராட்சி அலு வலர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரி கள், மாணவி குளிர்பானம் வாங்கி குடித்த பள்ளி அருகே உள்ள சாலை யோர கடைகளில் சோதனை மேற் கொண்டனர். அங்கு ரூ.2, ரூ.5, ரூ.10  என்ற விலைகளில் கலர் குளிர்பானங் கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட் டிருந்தது. இந்த நிறமூட்டி குளிர்பா னங்கள் விற்க அரசால் அனுமதி வழங் கப்படவில்லை. அனுமதி பெறாமல் குளிர்பானங்கள் தயாரித்து விற்ப னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பா னங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடைகளை அகற்றினர். மேலும், கடை உரிமையாளர்களிடம் இனிமேல் இங்கு கடை வைத்தால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அலு வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பறிமுதல் செய் யப்பட்ட கலர் குளிர்பானங்கள் தரம் இல் லாதவை என்றும், உள்ளூரில் தயா ரிக்கப்பட்டவை என்றும் தெரியவந் தது. இந்த குளிர்பானங்கள் தயாரித்த வர்கள் யார்? விற்பனைக்கு பயன்படுத் திய வாகனங்கள்? எங்கு வைத்து தயா ரிக்கிறார்கள்? என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;