திருப்பூர், ஜூலை 12- அரசுத் துறைகளில் கார்ப்பரேட் கம் பெனிகள் மூலம் ஆள் எடுக்கும் வகை யில் போடப்பட்ட அரசாணைகள் 152, 115, 139 ஆகியவற்றை ரத்து செய்ய வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பயனளிப்பு பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர்கள், எம் ஆர்பி செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் சட்டப்பூர்வ ஓய்வூதி யம் வழங்க வேண்டும். சாலை பணியா ளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்ப டுத்தி ஆணை வழங்க வேண்டும். சரண் விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை வழங்க வேண்டும். அகவிலைப்படி நிலு வைத் தொகையை வழங்க வேண்டும். அரசு துறைகளில் தனியார்மயமாக்கல், கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் ஆள் எடுக்கும் வகையில் போடப்பட்ட அர சாணைகள் 152, 115, 139 ஆகிய வற்றை ரத்து செய்ய வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராணி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் மா. பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் ஆர்.ராமன், பொருளாளர் ஜெ.முருக சாமி, மாவட்ட இணை செயலாளர்கள் எஸ்.ராணி, எம்.மேகலிங்கம் டி.வைர முத்து உட்பட சுமார் நூறு பேர் பங்கேற் றனர்.