districts

img

தலித் மக்களுக்கு உரிமையான நிலங்களை வழங்கிடுக: சிபிஎம் போராட்டம்

சேலம், செப்.20- தலித் மக்களுக்கு உரிமையான நிலங் களை அளந்து, எல்லை கற்கள் நட்டு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், தாதம்பட்டியில் உள்ள 15 ஏக்கர் நிலம் தோட்டி, ஊழியம், இனாம், அனாதீனமாக உள்ளது. இந்த நிலத்தை ஒரு சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய் தும், நில மோசடி செய்தும், போலி பத்திரங் களை உருவாக்கி உள்ளனர். இதன்மூலம் பெருமளவு பட்டியல் இனம் சார்ந்த மக்கள் பாதிப்படைந்துள்ளனர். சார் பதிவாளர் அலுவலக பதிவு குறிப்புகளிலும், வரு வாய் துறை அலுவலகம் சார்ந்த பல்வேறு கிராம கணக்கு பதிவேடுகளிலும் தலித் மக்க ளுக்கு சொந்தமான நிலங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது. தல தணிக்கை, புலத் தணிக்கை, கள ஆய்வு செய்து தாதம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட பட்டியல் இன மக்க ளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் தாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின்  சேலம் கிழக்கு மாநகர குழு உறுப்பினர் மா. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராம மூர்த்தி, கிழக்கு மாநகர செயலாளர் பொன்.ரமணி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளா னோர் பங்கேற்றனர். இதுகுறித்து தகவ லறிந்த அரசு அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர், சம்பந்தப்பட்ட பிரச்சனை குறித்து உரிய முறையில் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.

;