districts

கணினி பிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டி

கோவை, ஏப்.27– அனைத்து கணினி விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் நோட்வின் லோகா என்ற போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. விளையாட்டு இணையதளமான லோகோ மற்றும் நோட்வின் கேமிங் ஆகிய தளங்கள் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.  இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 55 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டி ஏப்ரல் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் டில்லியில் நடைபெறுகிறது.  3 நாள் நடைபெறும் இந்த போட்டியில் 16 பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா அணி வீரர்களும், அஸ்பால்ட் வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்த போட்டி இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பிரத்தியேகமாக லோகோ இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அதன் நிர்வாக இயக்குநர் அக்ஷத் ரதீ தெரிவித்துள்ளார்.