கோவை, ஜூன் 20- குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயின்று, முறை சார்ந்த பள்ளியில் சேர்க்கப்பட்டு தற் போது, கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பட்டப் படிப்பு முடித்து தனியார் நிறுவனங்க ளில் பணியாற்றி வருபவர்கள் என மொத்தம் 21 நபர்களுக்கு கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பாராட்டு தெரிவித்தார். கோவையில் குழந்தை தொழிலா ளர்களாக இருந்து மீட்கப்பட்டு, சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயின்று, முறைசார்ந்த பள்ளியில் சேர்க்கப் பட்டு, தற்போது கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறு வனங்களில் பணியாற்றி வருபவர்கள் என மொத்தம் 21 நபர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்றது. அப்போது, மேற் கண்ட 21 நபர்களை பாராட்டி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி புத்தகங் களை பரிசாக வழங்கினார். அப்போது, தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் உடனிருந்தார்.
இந்நிகழ்வில் ஆட்சியர் பேசுகையில், குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்களின் மறு வாழ்வை எளிதாக்குவதற்கும், தொழிற் பயிற்சியுடன் முறையான கல்வியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற் கும் உதவும் வகையில் தேசிய குழந் தைத் தொழிலாளர் திட்டம் (NCLP) திட் டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் கடந்தாண்டில் 35 சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு, 383 நிறுவனங்களிலிருந்து, 18 வயதிற்கு கீழான 27 குழந்தை தொழி லாளர்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து, கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயின்ற முறை சார்ந்த பள்ளியில் சேர்க்கப்பட்டு தற் போது, கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவ, மாணவியர்கள் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் உங்கள் அனைவரை யும் நான் பாராட்டுகிறேன். கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் படித் தால் நிச்சயமாக தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்பினை பெற லாம். அரசு திட்டங்களின் மூலம் உங்க ளுக்கு தேவையான உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும், என அவர் உறுதியளித்தார்.