உதகை, பிப்.21- மசினகுடி வனப்பகுதியில் பிளாஸ் டிக் குப்பைகளில் கால்நடைகள் உணவு தேடும் வீடியோ வைரலாகி சூழலியலாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ள, சுற்றுச்சூழல் முக்கி யத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட் டத்தில் 20 வருடங்களுக்கு முன்பே பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நீலகிரியில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் தடை செய் யப்பட்டு, 5 லிட்டர் குடிநீர் பாட்டில்க ளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட் டது. இதற்காக குடிநீர் ஏடிஎம் எந்தி ரங்களும் நிறுவப்பட்டன. பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைக் காரர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது. இவ்வளவு நடவடிக்கைகளுக்கு பிறகும் நீலகிரியில் பிளாஸ்டிக் பயன் பாடு முழுவதும் குறையவில்லை. குறிப்பாக சிறு வியாபாரிகளிடம் பிளாஸ் டிக் பைகள் பறிமுதல் செய்யப்படும் நிலையில் பெரு நிறுவனங்களின் சிப்ஸ் உள்ளிட்ட பாக்கெட் அதிக அளவில் தெருக்களில் கொட்டப்படு கிறது. இதனையடுத்து, நீலகிரியில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன் பாடுகள் சம்பந்தமாக அதிருப்தி அடைந்த சென்னை உயர் நீதிமன் றம் பல்வேறு உத்தரவுகளை பிறப் பித்து வருகிறது. இந்நிலையில், உதகையை அடுத்த மசினகுடி வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு சிதறி கிடக் கிறது. அதில் கால்நடைகள் உணவு தேடும் வீடியோ வைரலாகி சுற்றுச் சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த குப் பைக்குள்ளும் எந்த உணவும் இல்லா ததால் அந்த கால்நடைகள் பாவமாக அங்கிருந்து வேறு இடத்திற்கு செல் கின்றன. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர் வலர்கள் கூறியதாவது, நகராட்சி ஊராட்சி எல்லைப்பகுதியிலும், வனப்பகுதியிலும் குப்பைகள் சர்வ சாதாரணமாக கொட்டப்படு கிறது. அதில் பிளாஸ்டிக் குப்பைக ளும் சேர்ந்து விடுகின்றன. இவற்றை சாப்பிடும் கால்நடைகள் பாதிக்கப் பட்டு இறந்து விடுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் கெத்தை வனப் பகுதியில் இதுபோல் பிளாஸ்டிக் குப் பைகள் கொட்டப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரிக்கு சவாலாக உள்ளது. எனவே குப்பை களை முறையாக கையாள உள் ளாட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட் களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கடந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு பல கால்நடைகள் இறந் தன. இந்த ஆண்டு அதுபோல் ஏற்படா வண்ணம் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்க தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.