districts

img

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் மலை ரயில் என்ஜின்

மேட்டுபாளையம், அக்.9-  திருச்சி பொன்மலை ரயில்வே  பணிமனையில் ரூபாய் 9 கோடி செலவில் 7 மாதத்தில் தயாரிக்கப் பட்ட புதிய டீசல் மலை ரயில் என் ஜின் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தடைந்தது.        கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இருந்து உதகைக்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த நீல கிரி மலை ரயில்  இயக்கப்பட்டு வரு கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் 1899 ஆம் ஆண்டு மேட்டுப்பா ளையத்தில் இருந்து குன்னூர் இடையே நிலக்கரி மூலம் இங் ்கும் நீராவி ரயில் என்ஜினும் 1908 ஆம் ஆண்டு முதல் குன்னூர் -  உதகை இடையே டீசல் மூலம்  இயங்கும் மலை ரயில் எஞ்சின் களும் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயில் சேவை தொடங்கப் பட்ட காலத்தில் சுவிட்சர்லாந்தில்  தயாரிக்கப்பட்ட மலை ரயில் என் ஜின்கள் மூலம் மலை ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலை யில், நிலக்கரி தட்டுப்பாடு, உதிரி  பாகங்கள் கிடைக்காதது ஆகிய வற்றின் காரணமாக மலை ரயில் என்ஜினில் அடிக்கடி கோளாறு ஏற் பட்டு பழுதடைந்து வந்தது. இத னால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலை சேவை பாதிக்கப் பட்டு சுற்றுலா பயணிகள் அவதிப் படும் நிலை ஏற்பட்டு வந்தது.  மலை ரயில் என்ஜின்கள் மற் றும் பெட்டிகள் பழுது நீக்கும் பணிக் காக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப் படுவது வழக்கம். பணிமனையில் பழமை வாய்ந்த மலை ரயிலில் புதிய தொழில் நுட்பத்துடன் பல் வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டு டீசல் மூலம் இயங்கும் மலை ரயில் எஞ்சின்கள் மூலம் மலை ரயில் சேவை நடைபெற்று வந்தது. மேலும், வெளிநாட்டில் புதிய மலை ரயில் என்ஜின்களின் விலையும் உயர்ந்து விட்டது.

இதனை கருத் தில் கொண்டு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக டீசல் மலை ரயில் எஞ்சினை தயா ரிக்க தென்னக ரயில்வே துறை முடி வெடுத்து  அனுபவமும் திறமையும் மிக்க பொறியாளர்கள் மேற்பார் வையில் பணிமனை தொழிலாளர் கள் புதிய டீசல் ரயில் என்ஜினை  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மலை ரயில் என்ஜினின் பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்து டன் தேவையான உபகரணங்களு டன் புதிய டீசல் மலைரயில் என்ஜின் தயாரிக்கும் பணி தீவிரமாக நடை பெற்று இப்பணி 7 மாதத்தில் நிறை வடைந்தது. சுமார் 9 கோடி மதிப்பில் இந்த  புதிய டீசல் என்ஜின் உருவாக்கப் பட்டது. புதிதாக தயாரிக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் என்ஜின் 58 டன் எடையுடன், 2300 லிட்டர் டீசல் கொள்ளளவு கொண்டது. மேலும், இப்புதிய டீசல் மலை ரயில் என் ஜின் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள என்ஜின்களை விட வேக மாக இயங்க கூடியது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம். இந்நிலை யில், முதன்முறையாக முற்றிலும்  உள்நாட்டிலேயே உருவாக்கப்பட் டுள்ள இந்த புதிய என்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வே பணி மனை யில் இருந்து டிரக்கர் என்றழைக் கப்படும் அதிக பாரம் ஏற்றும் லாரி யில் ஏற்றப்பட்டு ஞாயிறன்று மேட் டுப்பாளையம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. இதனை லாரியிலிருந்து ரயில் நிலைய வளா கத்தில் உள்ள யார்டில்  இறக்கி  வைப்பதற்காக இரண்டு ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டுள் ளது.