திருப்பூர், செப்.9- உடுமலைப்பேட்டை மலைப்பகுதியில் உள்ள ஈசல்திட்டு குடியிருப்பில் 67 குடும்பங்களுக்கு வன உரிமை பட்டா வழங்க வியாழக்கிழமை கள ஆய்வு செய்யப்பட்டது. வீட்டுமனைக்கும், விவசாய நிலங்களுக்கும் பட்டா வழங் குவதற்காக, அளவீடு செய்யப்பட்ட வீட்டுமனைகளையும், விவசாய நிலங்களையும் ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியின நலத் துறை தனி தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வா ளர், வனத் துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கள ஆய்வு செய்தனர். இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் குப்புசாமி, மாவட்ட செயலாளர் கோ. செல்வன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் என்.மணியன், டி.முருகன், பி. நடராஜ், என்.முருகன், கே.சேகர், பி.சுப்பிரமணியன் ஆகி யோர் பங்கேற்றனர்.