districts

img

வெங்காய விதை வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 26 - விவசாயிகளுக்கு மானிய விலை யில் வெங்காய விதை வழங்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்ட விவசாய குறை  தீர்ப்பு கூட்டம் புதன்கிழமை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்  எஸ்.ஆர்.மதுசூதனன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகை யில் தக்காளி மற்றும் சின்ன வெங்கா யம்  பயிரிட்டு தொடர்ச்சியாக நியாய மான விலை கிடைக்காமல் விவசாயி கள் நஷ்டத்தை சந்தித்தனர். எனவே தான் தக்காளி, சின்ன வெங்காயம் பயிரிடாமல் தவிர்த்தனர். இதன் விளைவாகவே பற்றாக்குறை ஏற் பட்டு தற்போது தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை தாறு மாறாக உயர்ந்துள்ளது. இந்த நிலை  ஏற்படாமல் தவிர்ப்பதற்கு விவசாயி களுக்கு உரிய விலை கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண் டும். குறிப்பாக மக்கள் பெருமளவு பயன்படுத்தும் சின்னவெங்காய விதைகளை விவசாயிகளுக்கு அரசு  மானிய விலையில் வழங்க வேண் டும். இரண்டு மாத பயிரான சின்ன  வெங்காயம் ஏக்கருக்கு 50 ஆயிரம்  செலவாகும். எனவே அரசு மானிய  விலையில் விதை வழங்க வேண் டும். அதேபோல் தேங்காய் கொள் முதல் செய்வதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி இருப்பதாக கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் மாநில அரசு தலையிட்டு ஒன்றிய அரசிடம் நிதி பெற்று விவசாயகளிடம் தேங்காய், கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். உடுமலையில் கொப்பரை கொள் முதல் செய்ததில் பதிவு செய்த விவசா யிகள் முன்னுரிமை என்பதை கடைப் பிடிக்காமல் வேண்டப்பட்டவர்க ளிடம் ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து இந்த முறைகேட்டை களைய வேண்டும். முந்தைய அதிமுக ஆட்சிக் காலத் தில் 2020 ஜனவரி 31 ஆம் தேதி விவ சாய கடன் தள்ளுபடி என்று அறிவிக் கப்பட்டது. அதன் பிறகு கடன் தள்ளு படி சான்றிதழ் வருவதற்கு முன்பாக விவசாயிகள் கூட்டுறவுகளில் பணம்  கட்டியுள்ளனர். ஆனால் அந்தப் பணம் விவசாயிகளுக்கு திரும்பத்  தரப்படவில்லை. அரசு விடுவித்து  அந்தத் தொகை கூட்டுறவு சங்கங்க ளுக்கு வந்து விட்டது. அதை உட னடியாக விவசாயிகளுக்கு தர வேண் டும். மலைவாழ் மக்களின் பல்லாண்டு  கால கோரிக்கையை ஏற்று சாலை அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட  ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மதுசூத னன் கூறினார். இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்ட பொரு ளாளர் பாலதண்டபாணி கூறுகை யில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை  ஆலையில் சர்க்கரை அரவைக்கு  கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு  ரூ.6.75 கோடி நிலுவையில் உள்ளது.  

நிலுவைத் தொகையை உடனடியாக  விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்  என்று கேட்டுக் கொண்டார். கொடுங்கியம் சின்னச்சாமி பேசு கையில், பிஏபி கால்வாய்களை தூர் வாருவதற்கு 100 நாள் வேலை திட்ட  பணியாளர்களை பயன்படுத்த வேண்டும். மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொழுது நில உரிமைச் சான்று கேட் கிறார்கள். விவசாயிகளுக்கு நில  உரிமைச் சான்று வழங்க வேண்டும்,  என்றார். விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் உடுக்கம்பாளையம் பரமசி வம் பேசுகையில், திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுப்ப தற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அனுமதிக்கப்பட்ட அள வில் இன்னும் பெருமளவு வண்டல் மண் விவசாயிகள் எடுக்காமல் உள்ள னர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக உத்தரவு பிறப்பித்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். உடுக்கம்பாளையத்தில் அரசு  தொடக்கப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளி செயல்படுகிறது. சுற்று வட்டார தனியார் பள்ளிகளை விட  அதிக எண்ணிக்கையில் இங்கு மாணவ மாணவிகள் படித்து வருகின் றனர். சிறப்பாக செயல்படும் இந்த  பள்ளிக்கு தேவையான ஆசிரி யர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். கிராமப்புறமான இப்பகு திக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கி மாணவர்கள் கல்வி பெறு வதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண் டார்.

;