districts

img

சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு முறைகேடு: கணியூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜூலை 5 - பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக பத்திர பதிவு  செய்ததாக கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கணியூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பத்திரப்பதிவுத் துறை அலுவகத் தில் முறைகேடான பத்திரப்பதிவு களை ரத்து செய்து, சட்டத்திற்குப் புறம்பாக பதிவு செய்த அதிகாரிகள்  மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா செயலாளர் எம்.எம். வீரப் பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளியன்று கணி யூர் பேருந்து நிலையத்தின் முன்பாக  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மடத்துக்குளம் தாலூக்கா கணி யூர்  பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போலி யான ஆவணங்களைக் கொண்டு அரசு நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வ தாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள் ளது. எனினும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்காத நிலையில், தற்பொ ழுது தனியார் நிலங்களை போலி யான ஆவணம் மற்றும் ஆள் மாறாட் டம் செய்து கணியூர் பத்திரப்பதிவு அலுவலக சார்பதிவாளர், அதிகாரி கள் மற்றும் பத்திரப்பதிவு எழுத்தர் கள் முறைகேடாக விற்று பத்திரப்ப திவு செய்துள்ளதாக தெரியவந்துள் ளது. தூங்காவி கிராமம் பட்டா எண்:323 -ஐ கணியூர் சார் பதிவக உயில் எண்:  67/பி.கே.111/2006-ன் படி மூன்று நபர் களுக்கு சொத்துகள் பாத்தியப்பட் டது என்று பதியப்பட்டுள்ளது. ஆனால்,  கடந்த ஜூன் 13 அன்று கணி யூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் முதல் நபர் மற்றும் மூன்றாம் நபர்  கையெழுத்து இல்லாமல், முறைகே டாக விற்பனை பதிவு செய்துள்ள னர். இவ்வாறு பதிவு செய்த நிலத்தின்  மதிப்பு 10 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், இப்படி யான பல முறைகேடான பதிவுகளை  வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆவணங்களை வைத்து, கணியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு செய்ய வேண்டும். தவறாக பதியப்பட்ட பத்திரங்களை உடன டியாக ரத்து செய்து உரிய நபர்க ளுக்குத் தர வேண்டும். தவறு செய்த  அதிகாரிகள், பத்திர எழுத்தர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட பொருளாளர் பால தண்டபாணி, சங்கத்தின் தாலுக்கா  தலைவர் ராஜரத்தினம், வாலிபர் சங் கத்தின் முன்னாள் செயலாளர் ஆர். வி.வடிவேல், சிஐடியு சங்கத்தின் செயலாளர் பன்னீர்செல்வம், சங்கத் தின் நிர்வாகிகள் வெள்ளியங்கிரி. போஸ், ராஜகோபால், ராமலிங்கம் மற்றும் காடாம்பரி உள்ளிட்ட திரள னோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.