districts

img

சின்னாறு அணை திறப்பால் பயிர்கள் சேதம்

தருமபுரி, செப். 8- தருமபுரி மாவட்டம், பஞ்சப் பள்ளி சின்னார் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப் பட்டதால், பயிர்கள் சேதமடைந்த நிலையில், விவசாயிகள் இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத் துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோட்டை அடுத்த பஞ்சப்பள்ளி சின்னாறு  நீர்பிடிப்பு பகுதிகளில்  கன மழை பெய்து வரு கிறது. கடந்த மாதம் 5ஆம் தேதி   சின்னாறு அணை முழுக் கொள்ளவை எட்டியது. கடந்த  ஒரு மாதமாக சின்னாறு அணையி லிருந்து உபரிநீர் திறந்து விடப் படுகிறது. இந்த உபரிநீர் 50 கீமீ  பயணம் செய்து இறுதியில் ஒகே னக்கல் காவிரி ஆற்றில் கலக் கிறது.  கடந்த இரு தினங்களாக சின்னாறு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் சின்னாறு அணைக்கு 28 ஆயிரம்  கனஅடி நீர் வந்துக் கொண்டிரு கிறது. இந்நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து  விடப்பட்டுள்ளது.  இதனால்  சின் னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. சின்னாற்றையொட்டி உள்ள பென்னாகரம், கோடுப்பட்டி உள்ளிட்ட  பகுதிகளில் கரும்பு, நெல், சோளம்,தீவனப்புல், மஞ்சள் மற்றும் வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய் யப்படுகின்றன. தற்போது வெளி யேறிய நீரால் விளை நிலங்கள்  மூழ்கியுள்ளன. மேலும், கிணற்றில்  உள்ள மின் மோட்டார்கள் அனைத் தும் தண்ணீரில் அடித்து சென்ற தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம்  தண்ணீர் மூழ்கி சேதமடைந்த பயிர் களுக்கு உரிய இழப்பீடு வழங்கி  வாழ்வாதாரத்தை பாதுகாக்க  நடவடிக்கை எடுக்க வேண்டுமென  கோரிக்கை விடுத்துள்ளனர். 

;