districts

img

சமூக விரோத செயலுக்கா நெல் கொள்முதல் நிலையம்

ஈரோடு, செப்.30- நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படாமல், சமூக விரோத சக்திகள் பயன்படுத்துவதாக ஈரோடு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாய சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் மாதாந்திர கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதில், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றார். இதனைத் தொடர்ந்து விவ சாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவ சாயிகள் கூட்டத்தில் பேசினர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி பேசியதாவது, 1955ல் கீழ்பவானி பாசன கால்வாய் வெட்டப்பட்டு அதிலிருந்து பிரியும் வடுகபாளையம் கிராமத்தில் ஏஏ416 நிலக்குடியேற்ற சங்கத்திற்கு 466 ஏக்கர் உள்ளது.  இதில் 195 ஏக்கர் பயன்பாட்டிற்கு மதகு  வைக்காமல் இருந்தது. இதுகுறித்து  கோரிக்கை முன்வைத்ததை தொடர்ந்து  1987ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சிய ராக இருந்த கிறிஸ்துதாஸ் காந்தி  நேரடியாக ஆய்வு செய்து 3 மதகுகள்  வைக்க 10.12.1987ல் உத்தர விட்டார். ஆனால், இந்த கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை. இந் நிலையில் கடந்த 2020 ஜுன் மாதத்தில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மூலம் மாவட்ட ஆட்சியர், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளரிடமும் இதுகுறித்து முறையிட்டு வலியு றுத்தப்பட்டது. 

இந்த வேலையை 2 உதவி பொறி யாளர்கள் செய்ய வேண்டிய நிலையில்,  சிவகிரி உதவி பொறியாளர் தனது  வேலையை முடித்துள்ளார். அரச் சலூர் உதவி பொறியாளர் வேலையை  முடிக்காமல் நிலுவையில் உள்ளது. பலமுறை வலியுறுத்தியும் பயனில்லை.  இந்நிலையில் செயற்பொறியாளரும், விவசாய சங்கங்களும் உதவி செயற் பொறியாளருடன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முத்தரப்பு கூட்டம் நடத் தியது. அக்கூட்டத்தில் உதவி பொறி யாளர் பிரச்சனை உள்ளது என  கூறினார். அப்போது செயற்பொறி யாளர் மதகு வைக்கலாம், எவ்வளவு தூரம் பாய்கிறது. பாயாததைப் பற்றி  பின்னர் பேசலாம் என்றார். ஆனால் அதன்படி இன்று வரை மதகு அமைக் கப்படவில்லை என்று கூறினார். மேலும், தமிழ்நாடு நுகர்பொருள்  வாணிபக் கழகத்தின் மூலம் சத்திய மங்கலம், புளியங்கோம்பையில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக் கப்பட்டுள்ளது. இது மலையடிவா ரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில்  கீழ்பவானி பாசன விவசாயிகளோ அல்லது தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன திட்டத்தில் பயன்பெறுவோரோ விளையும் நெல்லை கொண்டு செல்வ தில்லை. இது நெல் கொள்முதல் செய்ய  உகந்ததாக இல்லை. கடந்த 3 அண்டு களுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிலை யத்தில் இதுவரை எந்த ஒரு நெல்லும் கொள்முதல் செய்யப்படவில்லை. சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாற வாய்ப்புள்ளது. இதனை  வேறு பயன்பாட்டிற்கு விட வேண்டும். கோபி தாலுகாவிற்குட்பட்ட கணக் கம்பாளையம் அருகிலுள்ள கரிவரத ராஜ் பெருமாள் திருக்கோவில் நிலத்தை  60 குடும்பங்கள் 152 ஏக்கர் நிலத்தை கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்து குத்தகை பாக்கியில்லாமல் பயன் படுத்தி வந்தனர். இந்நிலத்திலிருந்து ஏலத்தின் மூலம் இவர்களை வெளி யேற்ற நினைக்கின்றனர். கோவில் நிர்வாகம் தீர்மானிக்கும் குத்தகையை செலுத்தி வரும் விவசாயிகளை நிலத் திலிருந்து வெளியேற்றக் கூடாது. அவர்களை குத்தகை பதிவு சட்டம் 1969  கீழ் பதிவு செய்யக்கோரி முறையிட்டு வருகின்றனர். இவர்களை குத்தகை விவசாயிகளாகப் பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 2019ஆம் ஆண்டு உயர்த்தப் பட்டது. இன்றுவரை விலை உயர்த் தப்படவில்லை. நெல், கோதுமை, கரும்பு ஆகியவற்றிற்கு ஆண்டு தோறும் உயர்த்தப்படுகிறது. பருத்திக் கொட்டை, தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களின் விலை உயர்ந்து விட்டது. எனவே, பால் உற் பத்தியாளர்களுக்கு ரூ.10 உயர்த்தி பசும்பாலுக்கு 42ம், எருமைப்பாலுக்கு ரூ.51ம் விலை உயர்த்தி அறிவிக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். ஆரம்ப சங்கங்களிலிருந்து துணை குளிரூட்டும் நிலையத்திற்கு பால் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு  முன்பு அங்கு டெஸ்ட் செய்யப்படு கிறது. அதில் கொழுப்பு, அளவு குறிக் கப்படுகிறது. அங்கிருந்து ஒன்றி யத்திற்கு எடுத்துச் சென்று அங்கு ஒரு  டெஸ்ட் எடுக்கப்படுகிறது. அங்கு அளவு  குறைவதால் லிட்டருக்கு 3 வீதம் குறை கிறது. அதனால் சங்கங்கள் நலிவ டைந்து மூடப்படும் நிலைக்கு தள்ளப் படுகிறது. பால் எடுக்கும் போதே அளவை குறித்து கொடுக்க வேண்டும்   என்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அது அமல்படுத்த வில்லை. இதனை அமல்படுத்த வேண்டும்.  சத்தியமங்கலம் வட்டம், வரதம் பாளையம் கிராமத்தில் புல எண்.110ல்  அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.  அங்கு ஒரு தடுப்பு அணை கட்டப் பட்டுள்ளது. அந்த தடுப்பணையி லிருந்து தண்ணீர் வருவதை தடுத்து  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதிலி ருந்து மண் எடுத்து விற்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் அத்து காட்டி நீர் நிலை யினை மராமத்து செய்து விவசாயிகள்  பாசன வசதி பெற நடடிவக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பி.பெரியசாமி, கோபி தாலுகா பொருளாளர் ரத்தினம், விவ சாய சங்க சத்தியமங்கலம் தாலுகா  தலைவர் பி.கணேஷ், மணி, மாவட்டக் குழு உறுப்பினர் வி.எஸ்.மணியன்,  வெங்கடாசலம் உள்ளிட்ட விவசாயி  பலர், வேளாண்மை இணை  இயக்குநர் சின்னசாமி, மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) விஸ்வநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மரகதமணி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

;