districts

img

பாதிப்பு இல்லாத வகையில் உழவர் சந்தை வனத்துறை அமைச்சரிடம் வியாபாரிகள் வலியுறுத்தல்

உதகை, செப்.9- வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற் படாத வகையில் புதிய உழவர் சந்தை  அமைக்க வேண்டும் என தமிழக  வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்தி ரனிடம் கோத்தகிரி பகுதி வியாபாரி கள் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கடைவீதி பகுதியில் கடந்த 2009 ஆம்  ஆண்டு அலுவலகம், கடைகள், கழிப் பிட வசதி, வாகனம் நிறுத்துமிடம், பாதுகாப்பு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. இந்த உழ வர் சந்தை வழித்தடத்தில் மினிபேருந் துகள் இயக்கவும் உத்தரவிடப்பட் டது. ஆனால் பேருந்துகள் அந்த வழி யாக இயக்கப்படாததாலும், விவ சாயிகளுக்கு பதிலாக வியாபாரிக ளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டதா லும் உழவர் சந்தை சில மாதங்களில் மூடப்பட்டது.

இதன்பின் பலமுறை வேளாண் வணிகத்துறை அதிகாரி கள் உழவர் சந்தையை திறக்க முயற்சி மேற்கொண்டும், விவசாயிகள்  போதிய ஆர்வம் காட்டாததால் உழ வர் சந்தை மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு மாதங் களுக்கு முன்பு மார்க்கெட்டை ஒட்டி யுள்ள பகுதியில் தற்போது செயல் பட்டு வரும் சுமார் 50 கடைகளை அகற்றி புதியதாக உழவர் சந்தை  அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பேரூராட்சிக்கு கிடைத்து வரும் வரு வாயும் பாதிக்கப்படும். எனவே பழைய உழவர் சந்தையை புதுப்பிக்கவோ அல்லது மாற்று இடத்தில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும், பழங்குடியின மக்களும் இங்கு உழவர் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப் பட்ட இடத்தை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சரிடம், கடையிழந்து பாதிப்புக்குள்ளாகும் வியாபாரிகள் சுமார் 50க்கும் மேற்பட் டோர், தங்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வேறு பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் எனத் தனித்தனியாக கோரிக்கை மனுக் களை அளித்தனர். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி கோத்த கிரி அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்கெட் வியாபாரிகள் சங் கம் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது. அம்மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கா.ராமச்சந்தி ரன் வியாபாரிகளிடம், எவ்வித பாதிப் பும் ஏற்படாத வகையில் புதிய உழவர் சந்தை அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

;