மேட்டுப்பாளையம், டிச.5- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழ கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஹோட்டல்களில் தங்குவோர் ஆன் லைன் மூலமாக உணவுகள் பெற வசதியாக ஆன்லைன் நிறுவனங் களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப் படும் என சுற்றுலாத் துறை அமைச் சர் மதிவேந்தன் தெரிவித்தார். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வழியே நீலகிரி சென்ற அமைச்சர் மேட்டுப்பாளையத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டு புதர் மண்டி கிடக்கும் தமிழ்நாடு ஹோட் டலை பார்வையிட்டார். இதன்பின் அதனை சீரமைத்து சுற்றுலா பயணி களின் வசதிக்காக மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஹோட்டல்களை மேம் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு தங்கி செல்ல ஆன்லைன் பதிவு வசதி செய்யப்பட் டுள்ளதால் அதன் மூலம் மட்டும் கொரோனா கால ஊரடங்கிற்கு பின் னர் ரூபாய் 22 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆன் லைன் மூலம் தங்களுக்கு தேவை யான உணவுகளை பெற வசதியாக ZOMATO, SWIGGY போன்ற நிறுவ னங்களுடன் விரைவில் ஒப்பந்தம் போடப்படவுள்ளது. நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை மேம் படுத்தவும் திரைப்பட படப்பிடிப்பு தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.