districts

img

“போதும் மோடி, பை பை மோடி” பிரச்சாரம்

திருப்பூர், ஏப்.4- “போதும் மோடி, பை பை மோடி” என்ற  முழக்கத்துடன் திருப்பூரில் நவீன மனிதர் கள் அமைப்பினர் பிரச்சாரத்தைத் தொடங்கி யுள்ளனர். ஒத்த சிந்தனையுடைய நண்பர்கள் இணைந்து நவீன மனிதர்கள் என்ற இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். அரசியல் தளத்திலும் சமூக தளத்திலும் மக்களின் சிந்தனை திறனை மேம்படுத்துவது; சாதி, மத, இன, மொழி, பால், பொருளாதார ஏற்ற தாழ்வுகள் அற்ற, அனைவருக்கும் சம உரிமை வழங்கக்கூடிய மனிதநேயம் மிக்க  சமுதாயத்தை அமைப்பது, என்பதை நோக்க மாகக் கொண்டு விழிப்புணர்வுப் பிரச்சாரத் தில் ஈடுபடுகின்றனர். நவீன மனிதர்கள் அமைப் பினர் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசி யலை மக்களிடையே விதைத்துக் கொண்டி ருக்கும் இன்றைய ஒன்றிய அரசின் அவ லத்தை, “போதும் மோடி, பை பை மோடி” என நூதனப் பரப்புரையின் மூலம் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வுப் பிரச்சா ரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். “வாக்களிப்பது மக்களாகிய உங்கள் உரிமை; ஆனால் யாருக்கு வாக்களிப்பது என்று சிந்தித்து வாக்களிப்பது உங்களது கடமை” என்ற சிந்தனையை விதைத்து வரு கின்றனர். இந்த நூதனப்பிரச்சாரம், இளை ஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி, பல்வேறு இடங்களில் “போதும் மோடி, பை பை மோடி” என எதிரொலித்து வருகின்றது.