தருமபுரி, பிப்.23- குடியிருப்பு பகுதிகளில் ஏரி நீர் புகுவதை தடுக்க, உபரிநீர் கால்வாய் களை அகலப்படுத்த வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், இலக்கியம் பட்டி ஊராட்சிக்குட்பட்ட பிடமனேரி யில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நெல்லி நகர், மாந்தோப்பு, பிடமனேரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து மழைநீர் வருகிறது. மேலும், இப்பகுதி களில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், பிடமனேரி ஏரியில் கலந்து வருகிறது. இதனால் இந்த ஏரி பெரும்பாலும் தண்ணீர் நிறைந்து காணப்படும். இதனால் சிறு மழை பெய்தாலே, பிடமனேரி நிரம்பி உபரிநீர் வெளியேறுவது வழக்கம். பிடமனேரியில் இருந்து ஏஎஸ்டிசி காலனி, டிஎன்வி நகர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள உபரிநீர், பாசன கால்வாய் வழியாக தருமபுரி ராமக் காள் ஏரிக்கு செல்லும். குறைந்த அள வில் மழை பெய்ததாலே உபரிநீர், கால் வாய் சிறிய அளவில் உள்ளதால் அவை நிறைந்து ஏஎஸ்டிசி காலனி, டிஎன்வி நகர் மற்றும் அதை ஒட்டியுள்ள குடியி ருப்புகளில் தண்ணீர் புகுந்து வருவதும், சாலையில் ஆறு போல் ஓடுவது மழைக் காலங்களில் தொடர் கதையாக உள் ளது. குறிப்பாக, தருமபுரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில், பெஞ்சல் புயல் காரணமாக கடந்த நவ.30 மற்றும் டிச.1 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் பிடமனேரி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கால்வாய் சிறியதாக உள்ளதால், அதிகளவில் உபரி நீர், வீடுகள், ஸ்கேன் சென்டர், பெட் ரோல் பங்க் உள்ளிட்டவற்றில் புகுந்தது. மேலும், சாலையில் வெள்ளம் பெருக் கெடுத்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அதிகளவில் பொருட் களும் சேதமடைந்தன. பிடமனேரி ஏரி உபரிநீர் குடியிருப்புகளில் புகும் போதும் மட்டும் கால்வாயை அதிகாரிகள் பெய ரளவு அகலப்படுத்துகின்றனர். பின்பு கால்வாயை தொடர்ந்து பராமரிக்க ஆர் வம் காட்டுவதில்லை. எனவே, மழைக்காலங்களில் பிடம னேரி ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், குடியிருப்புக்களில் புகாமல் இருக்க மாவட்ட நிர்வாகம், ராமக்காள் ஏரிக்கு செல்லும் உபரிநீர் கால்வாய், பாசன கால்வாய் செல்லும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை விரைந்து அகற்ற வேண்டும். கால்வாய்களை அகலப்ப டுத்தி, உபரிநீர் குடியிருப்புகள், சாலை களில் தேங்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக் கள் வலியுறுத்தியுள்ளனர்.