திருப்பூர், ஜூலை 23 - ஆசிரியர்களின் கற்பித் தல் பணி சிறக்கவும், மாண வர்களின் கற்றல் வலுப் பெறவும் மிகுந்த தடை யாய் உள்ள இ.எம்.ஐ.எஸ். பதிவுகள் பதிவேற்றப் பணி களை உடனடியாக நிறுத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் திருப்பூர் மாவட்ட சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் ஞாயிறன்று தாராபுரத்தில் மாவட்டத் தலைவர் இரா.இராஜ்குமார் தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அ.பிரபு செபாஸ் டியன் வரவேற்றுப் பேசினார். பொருளாளர் ப.ஜெயலட்சுமி வரவு-செலவு அறிக்கை முன் வைத்தார். மாநிலச் செயலாளர் எஸ்.சுனில் குமார், எதிர்கால இயக்க நடவடிக்கைகள் பற்றி உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் ப.கனகராஜா உள்பட பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மணிப்பூர் மாநில கலவரத்தில் கொல் லப்பட்ட மக்களுக்கு அஞ்சலியையும், மணிப் பூர் பழங்குடியின பெண்கள் மீது கட்ட விழ்த்துவிடப்பட்ட தாக்குதல், வன்புணர்வு, கொலை உள்ளிட்ட வன்முறைகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. மணிப்பூர் மாநில அரசும், ஒன்றிய அரசும் உடனடியாக தலையிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாண வர்களின் கற்றல் ஆகியவற்றைப் பாதிக்கும் இ.எம்.ஐ.எஸ். பதிவுப் பணிகளை கல்வித் துறை கைவிட வேண்டும் தேர்தல் கால வாக்குறுதிகளான, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத் துதல், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்தல் போன்றவற்றை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிர மணியம் நன்றி கூறினார்.