districts

மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்திடுக

கோவை, மே 21- தமிழ்நாடு அரசின் யானைகள்  வழித்தட வரைவு அறிக்கை  குறித்து, மக்களிடம் கருத்துக் கேட்பு  கூட்டம் நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு அரசின் யானை கள் வழித்தடம் தொடர்பான வரைவு  அறிக்கை குறித்து பொதுமக்களி டம் கருத்துக் கேட்பு நடத்த கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கோவை மாவட்டக் குழு சார்பில் செவ் வாயன்று கோவை மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.எஸ் கனகராஜ், ஆறுச் சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் மூர்த்தி, தொண்டாமுத்தூர் ஒன்றி யக் குழு செயலாளர் மணி உள்ளிட் டோர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனுவினை வழங் கினர்.  அந்த மனுவில் கூறியிருப்பதா வது, தமிழ்நாடு அரசின் வனத்துறை  கடந்த ஏப்ரல் 29ஆம் தேதியன்று யானை வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை  ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மீது 7 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. வனத்துறையின் அறிக்கை மக்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. போதுமான கால அவகாசம் வழங்காமல் ஒரு  வாரம் மட்டும் எனச் சொல்லி இருப் பது சரியல்ல. மேலும், யானை வழித்தடம் தொடர்பாக மலைவாழ் மக்கள், அரசியல் கட்சிகள், விவ சாயிகள், சூழலியலாளர்கள் ஆகி யோருடன் விரிவான விவாதம் நடத் தப்பட்டு இருக்க வேண்டும்.  வன உரிமைச் சட்டம் 2006 அளித் துள்ள உரிமைகளை பாதுகாக்கும் வகையில் யானை வழித்தடங்கள் குறித்த அறிக்கை அமைய வேண் டும். கோவை மாவட்டத்தில் மேற்கு  தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடி வாரப் பகுதிகளில் வாழும் மக்களி டம் மாவட்ட நிர்வாகம் ‘யானை  வழித்தடம்’ என வரையறுக்கப்பட் டது, சம்பந்தமாக பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி அவர்களின் அச்சத்தை போக்கிட முன்வர வேண்டும்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.