தரையில் பாயும் மின்சாரம்: அதிகாரிகள் அலட்சியம்
நாமக்கல், மே 13- மல்லசமுத்திரம் அருகே மின்கம்பத்தில் இருந்து தரை யில் பாயும் உயர்மின்னழுத்த மின்வட கம்பியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே உள்ள பாலமேடுபுதூர் பகுதியில், கோட்டப்பாளையம் ஏரி அருகே அம்மன்கோவில் பின்புறத்தில் பாப்பாத்தி (56) என்பவரது விவசாய நிலத்தில் உயர்மின்னழுத்த மின்வட கம்பிகள் தரையில் புதைந்தவாறு இழுத்து கட்டியுள்ளனர். குறிப்பாக, இதன் அருகில் ஏரி இருப்பதால் மழைக்காலங்களில் ஏரி உபரிநீர் இந்த மின்கம்பிகளில் மோதி மின்சாரம் பாயும் வாய்ப்புள்ளது. இதனால் ஆடு, மாடு மேய்ச்சலுக்காக வருப வர்கள் மற்றும் சுற்றியுள்ள வயல்வெளி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த மின்சார கம்பிகளின் மூலமாக மின்சாரம் பாய்ந்து ஆடு, மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் உயிர் போகும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து புகாரளித்தபின்பும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆய்வுசெய்து, பூமிக்கடியில் செல்லும் உயர் மின்அழுத்த மும்முனை மின்வட கம்பியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை - 9 பேர் கைது
உடுமலை, மே 13- உடுமலைப்பேட்டை பகுதியில் சிறுமியை கூட்டு பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில், மூன்று சிறுவர்கள் உட்பட 9 பேரை காவல்து றையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நி லையில் மாற்றம் ஏற்பட்டது. இதை யடுத்து சிறுமியை அங்குள்ள மருத்து வமனைக்கு அழைத்துச் சென்று பரி சோதனை செய்ததில், சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறு மியின் உறவினர்கள், அவரிடம் விசாரித்த போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் தன்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து, உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்து றையினர், ஜெய காளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) ஆகியோரையும், 14, 15, 16 வயதுடை 3 சிறுவர்க ளையும் கைது செய்தனர். இந்த 9 பேரும் உடுமலை பகுதி யைச் சேர்ந்தவர்கள் ஆவர். காவல் துறையினர் இவர்களை நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத் தனர். இதனிடையே, சிறுமி பாலி யல் வன்கொடுமை குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர் கள் உடுமலை ஏடிஎஸ்பி அலுவல கத்தின் முன்பு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உரிய விசாரணைக்கு பின்னரே சம்பந்தப் பட்டவர்களை கைது செய்துள்ளதா கவும், காவல் துறையின் நடவடிக் கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண் டும் என்றும் காவல்துறையினர் கூறினர். இதைத் தொடர்ந்து அவர் கள் அங்கிருந்து கலைந்து சென்ற னர். இந்த விவகாரம் வெளிவந்தி ருக்கும் நிலையில், இவருடன் மேலும் ஒரு சிறுமியும் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இப்பிரச்சனை குறித்து பாரபட்சமின்றி, முழுமை யான விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என உடுமலை மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
ஹஜ் யாத்திரை செல்வோருக்கு மருத்துவ முகாம்
உதகை, மே 13- உதகையில் ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கான தடுப்பூசி முகாமில் 64 பேர் பங்கேற்று தடுப்பூசி செலுத் தினர். ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்காக தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, சுன்னத் ஜமாத் பெடரேஷன் இணைந்து நடத் திய தடுப்பூசி முகாம், உதகையில் உள்ள பெடரேஷன் மதினா பள்ளி வாசலில் நடைபெற்றது.இதில், உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், 35 பெண்கள், 29 ஆண்கள் என, 64பேர் தடுப்பூசி முகாமில் பங்கேற்று, தடுப்பூசி செலுத் திக் கொண்டனர். இம்முகாமை சுகாதாரத்துறை இணை இயக் குனர் பாலுசாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஹஜ் கமிட்டி தலைவர் சயியுல்லா கான், துணைத்தலைவர் சலா முல்லா, அப்துல் காதர், செயலாளர் அப்துல்ரசீத், துணைச் செயலாளர்கள் கவுஸ் மொய்தீன், பொருளாளர் பியாரே ஜான் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இன்னுயிர் காப்போம் திட்டம் தருமபுரியில் 3,724 பேர் பயன்
இன்னுயிர் காப்போம் திட்டம் தருமபுரியில் 3,724 பேர் பயன் தருமபுரி, மே 13- தமிழக அரசின் ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ என்ற திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் 3,724 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 எனும் திட்டம் சாலை விபத்துகளில் ஏற்ப டும் உயிரிழப்புகளை குறைப்பதோடு, அதனால் குடும்பங் களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கும் இந்த உயிர்காக்கும் திட்டத்தின் கீழ் விபத்து நிகழும் பகுதி களுக்கு அருகே உள்ள மருத்துவமனைகளில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்ப டுகிறது. தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 3,724 நபர்களுக்கு ரூ.2 கோடி 23 லட்சத்து 25 ஆயிரத்து 500 செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப் பட்டுள்ளது. சாலை விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுவோ ருக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள் ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிவேரியில் பொதுமக்கள் உற்சாக குளியல்
கொடிவேரியில் பொதுமக்கள் உற்சாக குளியல் ஈரோடு, மே 13- கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்ட னர். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இங்கு 15 அடி உயரத்தில் இருந்து அருவிபோல நீர் கொட்டுவதால் ஈரோடு மட்டு மின்றி பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக் கம். தற்போது கோடை விடுமுறை, வார இறுதிநாட்களாக சனி மற்றும் ஞாயிறன்று காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பய ணிகள் வரத்தொடங்கினர். இங்கு அணையில் அருவிபோல கொட்டும் நீரில் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்ததோடு, பலர் குடும்பத்துடன் பரிசல் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
ரூ.1.90 கோடிக்கு மஞ்சள் ஏலம்
ரூ.1.90 கோடிக்கு மஞ்சள் ஏலம் நாமக்கல், மே 13- திருச்செங்கோட்டில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற் பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமைய கத்தில், மஞ்சள் விற்பனை டெண்டர் மூலம் நடைபெற்றது. ஜேடர்பாளையம், சோழசிராமணி, இறையமங்கலம், சங்க கிரி, எடப்பாடி, கொளத்தூர், ஓமலூர், அரூர், பொம்மிடி, ஊத் தங்கரை, கொடுமுடி, பாசூர், அந்தியூர், துறையூர், தம்மம் பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யார், தலைவா சல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.16,330 முதல் ரூ.18,833 வரையி லும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ.15,058 முதல் ரூ.17,199 வரையிலும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் ரூ.19,482 முதல் ரூ.26,569 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் விவசாயி கள் கொண்டு வந்த 1800 மூட்டை மஞ்சள் ரூ.1.90 கோடிக்கு விற்பனையானது.
மயானத்திற்கு செல்லும் சாலை துண்டிப்பு ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்
தருமபுரி, மே 13- பென்னாகரம் அருகே மயானத்திற்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம், செங்கனூர் அருகே உள்ள ஜெங்கமையனூர் கிராம மக்கள், ஆட்சியர் அலுவல கத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, செங்கனூர் ஊராட்சியில், ஜெங்கமையனூர் கிராமத்தில் 500க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் அருகே உள்ள மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதற்காக 12 பட்டாதாரர்களில் 11 பட்டாதார்கள் நிலம்கொ டுத்து மயானத்திற்கு செல்ல சாலை ஏற்படுத்தப்பட்டது. அந்த சாலையின் வழியாக 10 சடலம் இதுவரை கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், மயானத்துக்கு செல்லும் சாலையில் பொக்லைன் வைத்து 6 அடி அகலத்திற்கு 60 அடி நீளம் தோண்டி சாலையை துண்டித் துள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரகத்துறையினர் நேரில் ஆய்வு செய்து, சாலையை சீர் செய்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
தருமபுரி, மே 13- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் காவிரி ஆறு வறண்டு காணப்பட்டது. இத னால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பய ணிகளின் எண்ணிக்கை கோடை விடுமு றையின் தொடக்கத்திலிருந்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற் றாம்பாளையம், கேரட்டி, மொசல் மடுவு, பிலி குண்டுலு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளது. அதன்படி, ஞாயிறன்று விநாடிக்கு ஆயி ரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே, கோடை வெயிலின் தாக்கத் தால் நீர்நிலைகள், மலைப்பகுதிகளுக்கு ஏரா ளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் சென்று வருகின்றனர். அதன்ஒருபகுதியாக கர்நாடகா, கேரளம், ஆந்திர மாநிலங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்து 20 ஆயிரத்துத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பய ணிகள் ஞாயிறன்று ஒகேனக்கல்லில் குவிந்த னர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக் கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், பிர தான அருவி, சினி அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
உலகச் சந்தை நிலவரம் என்று பெரும் வியாபாரிகள் பருத்தி விலையை நிர்ணயிக்க சைமா எதிர்ப்பு
திருப்பூர், மே 13 - உலகச் சந்தை நிலவரம் என்று, தின சரி ஏற்ற இறக்கமான முறையில் பெரும் வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்ய அனுமதிக்கக் கூடாது என தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் திங்களன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எம்.என்.சி என்று சொல்லக்கூடிய பெரும் வியாபா ரிகள், இந்திய பருத்திக் கழகத்தில் பஞ்சு கொள்முதல் செய்து, இருப்பு வைத்து விலையை அதிகரித்து விற்பனை செய்து வந்தார்கள். இவர்கள் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி யதை சைமா பலமுறை சுட்டிக்காட்டி வந்தது. இந்நிலையில், சிசிஐ நிறுவ னம் பெரும் வியாபாரிகளுக்கு விற் பனை செய்யக்கூடாது. பஞ்சை வாங்கி நூல் தயாரிப்பவர்களுக்கு மட்டுமே விற் பனை செய்ய வேண்டும். கோவை யில் சிசிஐ குடோன் அமைக்க மத்திய ஜவுளித்துறை அனுமதி போன்ற அறி விப்பிற்கு மகிழ்ச்சி தெரிவிக்கிறோம். ஜவுளி தொழில் நன்மைக்காக, பருத்தி விலையை நியாயமாக நிர்ண யிப்பதற்கு சம்மதிக்கிறோம். அதேசம யம் உலகச் சந்தை விலை நிர்ணயம் என்று கூறி, தினசரி விலையை ஏற்ற, இறக்க முயற்சித்தால் சீரான விலை நிர்ணயிக்க முடியாமல் நூற்பாலைக ளும், அதைத்தொடர்ந்து பின்னலாடை, விசைத்தறி, கைத்தறி தொழில்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சிசிஐ யிடம் இருந்து நேரடியாக பஞ்சு கொள்முதல் செய்ய முடியாத பெரும் வியாபாரிகள், ஜின்னர்களிடம் வாங்கி விடுகிறார்கள். எனவே அதற்கான தடை யையும் ஏற்படுத்த வேண்டும். மேற்கண்ட வகையில் உள்நாட்டு தேவைக்கு மேல் உள்ள பஞ்சை பெரும் வியாபாரிகள் சிசிஐயிடம், கொள்மு தல் செய்து ஏற்றுமதிக்கு பயன்படுத்த வேண்டும். பெரும் வியாபாரிகள் உள் நாட்டு சந்தையில் விற்க அனுமதிக்கா மல் உத்தரவுகளை பிறப்பிக்க வேண் டும். எனவே, ஜவுளி தொழில் சீராக இயங்க சைமாவின் ஆலோசனையை பரிசீலிக்க வேண்டும் என்று ஏ.சி. ஈஸ்வ ரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு நாமக்கல், மே 13- கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த இளைஞர், அங்குள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையின் தெற்கு பகுதி யில் புளியஞ்சோலை வனம் உள்ளது. அங்குள்ள, பிரசித்தி பெற்ற பெரியசாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், சுற்று லாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பனியன் நிறுவன ஊழியர் கங்கா தனது மகன் சிவகுமாா் (19) மற்றும் உறவினர்களுடன் ஞாயி றன்று புளியஞ்சோலை பெரியசாமி கோயிலுக்கு சாமி தரி சனம் செய்ய வந்தார். அப்போது, கோவில் திறக்காததால், அவ்வழியாகச் செல்லும் ஆற்றில் குளிக்க சென்றனர். அனை வரும் குளித்துக் கொண்டிருந்தபோது, சிவகுமார் மட்டும் திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு ஆழமான பகுதியில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். நீச்சல் தெரியாததால் சிவகுமார் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அவரது உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கொல்லிமலை வாழவந்தி நாடு காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.