districts

img

மக்களை தேடி மருத்துவம் - பணியாளர்களை பாதுகாக்காதா?

இதுகுறித்து விசாரிக்கலாமென சுகாதார பணிகள் துணை இயக்குநரை தொடர்பு கொண்டால் பதில் அளிக்கவில்லை. தகவல் தொடர்பு அலுவலரைத் தொடர்பு கொண்டால் அவர் சுகாதார ஆய்வாளரிடம் பேசுங்கள் என ஒரு செல்போன் நம்பர் கொடுத்தார். அவரைத் தொடர்பு கொண்டால் மருத்துவரிடம் பேசுங்கள்; அவருக்குத்தான் விரல் நுனியில் விவரங்கள் உள்ளது என்றார். ஆனால், அந்த மருத்துவர் என் மேலதிகாரி தீக்கதிரிடம் விபரங்களைப் பகிர்ந்து கொள்ள உத்தரவு அளிக்கவில்லை, என்றார். இதுதான் ஈரோடு மாவட்டத்தின் நிலையாக உள்ளது.

வீடு வீடா செல்கிறோம். வீட்டுப்பாடம் போல் எழுதுகிறோம். மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உழைக்கிறோம். ஆனால் எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல் தெருவில் நிறுத்தலாமா என்கின்றனர் மக்களை தேடி மருத்துவம் பார்க்கும் தன்னார்வலர்கள். 

தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தொற்றா நோய் இறப்பு விகிதம் 69.2 விழுக்காடாக உள் ளது. தொற்றா நோய்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு “மக்க ளைத் தேடி மருத்துவம்” என்பதை முதன்மையான திட்டமாக தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டம் இல் லம் தேடிச்சென்று குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் சுகா தார தேவைகளையும் கண்டறிந்து சேவைகள் அளிக்கிறது என இது தொடர்பாக வெளியிடப் பட்ட அரசு ஆவணம் கூறுகிறது. இதற் காக அனைத்து தொற்றா நோய் செவி லியர்களும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் செவிலியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 463  செவிலியர்களும், இயன்முறை மருத் துவர்களும் இச்சேவையில் ஈடு பட்டுள்ளனர். தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் ஊரக பகுதி களில் 8 ஆயிரத்து 713 பேர், நகர்ப்புறங் களில் 2 ஆயிரத்து 256 பேர் சுய  உதவிக்குழுக்களிலிருந்து பெறப் பட்டு மொத்தம் 10 ஆயிரத்து 969 பெண் கள் சுகாதார தன்னார்வலர்களாக களத்தில் செயல்பட்டு வருகின்றனர். இப்பணிகளுக்காக 4 ஆயிரத்து 848 துணை சுகாதார நிலையங்கள் நல வாழ்வு மையங்களாக மாற்றப்பட்டுள் ளது. இதில், 4 ஆயிரத்து 848 சுகா தார பணியாளர்கள், 2 ஆயிரத்து 448  பல்நோக்கு சுகாதார பணியாளர் கள் (ஆண்) நியமிக்கப்பட்டுள்ள னர். 

இவ்வாறு கிராம சுகாதார செவிலி யர்கள், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பகுதி நேர சுகாதார செவிலியர்கள் மற்றும் சமுதாய சுகாதார செவிலி யர் ஆகியோரடங்கிய குழு இத்திட்டத் தின் சேவைகளை வழங்கி வருகிறது. இதில் கடை நிலையில் மக்களை சந்திக்கும் பணியில் உள்ளவர்கள் பெண் சுகாதார தன்னார்வலர்க ளாகவே உள்ளனர். 10 ஆம் வகுப்பை அடிப்படை கல்வித்தகுதியாகக் கொண் டவர்கள் இதில் சேர்க்கப்பட்டனர். இரண்டு நாள் பயிற்சி அளித்து களத் திற்கு அனுப்பப்பட்டனர். உயர் ரத்த  அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பரி சோதனை கருவிகளுடன் தொடக்கத் தில் 20 நபர்களைப் பார்த்தால் போதும் என்று சொல்லப்பட்டது. தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்க  வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.4 ஆயிரத்து 500 வழங்கப் பட்டது. அதுவும் மகளிர் சுய உதவிக் குழு மூலம் காசோலையாக வழங் கப்படும். இப்பணிகளுக்கு ஒதுக்கப் பட்ட பகுதிகளுக்குச் செல்ல போக்கு வரத்து செலவை தன்னார்வலரே பார்த் துக்கொள்ள வேண்டும். 

ஆரம்பத்தில் காலை சுமார் 9 மணி யளவில் தொடங்கும் பணி பகல் 2  மணியுடன் முடிந்து விடும். இந்நிலை யில் 20 நபர்கள் எனக்கூறப்பட்டது, 20  வீடுகளாக மாற்றப்பட்டது. இதில் ஒரு  வீட்டிற்கு 4 பேர் வீதம் 80 நபர்களை பரி சோதிக்க வேண்டும். குடும்ப அட்டை யில் உள்ளவர்கள் பற்றிய விபரங்கள் கேட்க வேண்டும். திருமண நாள், தடுப்பூசி போட்ட தேதி உள்ளிட்ட விப ரங்கள் பெற வேண்டும். இதனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முடிப்ப தற்குள் பொழுது சாய்ந்து விடும். இதன் பின் வீட்டிற்குச் சென்றால் வேலைக் குச் செல்கிறேன் என்று ஊர் சுற்றிவிட்டு வருகிறாயா? என கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது என பெண் தன்னார்வலர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும், பெறும் ஊக்கத்தொகை யிலிருந்து தான் போக்குவரத்து செலவு செய்ய வேண்டும். தங்கள் உபயோ கிக்கும் கருவிகளுக்கான பேட்டரியை யும் வாங்க வேண்டும். ஆன்ட்ராய்டு  செல்போன் இணைய வசதியுடன் வேண் டும். களத்திலிருந்து படம் எடுத்து  அனுப்ப வேண்டும். ஆள் இல்லை என் றால் செல்பி எடுத்து அனுப்ப வேண் டும். களப்பணி முடிந்து சேகரிக்கப் பட்ட விபரங்களை வீட்டில் அமர்ந்து தனியார் பள்ளி குழந்தைகளைப் போல வீட்டு பாடம் எழுத வேண்டும். இந்த சம்பளத்திற்கு இவ்வளவு வேலை செய்ய வேண்டுமா என வீட் டில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். இந்நிலையில், மக்களைத் தேடி  மருத்துவம் என்னும் திட்டம் ஓராண் டைக் கடந்துள்ளது. கடந்த 6 மாதங் களுக்கு முன்பே 50 லட்சமாவது பயனா ளியைக் கடந்து விட்டது. சுமார்  ஒரு கோடி பேர் தொடர் மருத்துவ சேவைகளைப் பெற்று வருகின்றனர். ஆனால், மக்களைச் சந்திக்கும் தன் னார்வலர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலர் வேலையை விட்டே சென்று விட்டனர். அவர்களுக்கு உரிய பயிற்சியும், ஊக் கத்தொகை என்ற பெயரில் வழங்கப் படும் ஊதியத்தை உயர்த்தியும் அளித் தால் முதன்மையான திட்டம் மேலும் சிறப்படையும்; திட்டத்தின் நோக்கம் நிறைவடையும். இதனை அரசு கவ னிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள் ளது. மக்களை தேடி மருத்துவ திட்டம் இதற்காக உழைக்கிற பணியாளர் களையும் பாதுகாக்க வேண்டும் என் பதே விபரம் அறிந்தோரின் எதிர்பார்ப் பாக உள்ளது.

-சக்திவேல், ஈரோடு.

;