districts

img

நிலம் கொடுத்த விவசாயிகளை வஞ்சிக்காதீர்! டிச.22ல் பாரதியார் பல்கலைக் கழகம் முற்றுகை - பி.ஆர்.நடராஜன் எம்.பி., அறிவிப்பு

கோவை, டிச.11- பாரதியார் பல்கலைக் கழகத் திற்கு நிலம் கொடுத்த விவசாயி களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிலுவை வட்டியை உடனடியாக வழங்க வலியுறுத்தி, பாதிக்கப் பட்ட விவசாயிகளுடன் டிச. 22 ஆம் தேதியன்று பாரதியார் பல்கலைக்கழகத்தை முற்றுகை யிட உள்ளதாக கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது, கோவை பாரதியர் பல் கலைக்கழகத்திற்காக நிலம் கொடுத்த  விவசாயிகள் நவ. 21 ஆம் தேதியன்று என்னிடம் கொடுக்கப் பட்ட  மனுவின் அடிப்படையில், மேற்கண்ட கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பினேன்.

அதில், கடந்த 2007 ஆம் ஆண்டு கோவை சார்பு நீதி மன்றத்தில் விவசாயிகளுக்கு 1894 - நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி உயர்த்தப்பட்ட நில மதிப்பு மற்றும் வட்டித்தொகை  தரவேண்டும் என தீர்ப்பு வழங்கப் பட்டது. ஆனால், தமிழக அரசு 3 ஆண்டுகள்  காலதாமத்திற்குப் பிறகு 2010 மற்றும் 2011  ஆண்டு களில் சென்னை உயர்நீதி மன்றத் தில் மேல்முறையீடு செய்தது. அத னடிப்படையில், இந்த மேல் முறை யீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பில், கோவை சார்பு நீதி மன்றத் தீர்ப்பை உறுதி செய்யுள் ளது.   ஆனால், தற்போது வரை நீதிமன்ற தீர்ப்பின்படி இழப்பீட் டுத் தொகை வழங்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது.

எனவே, கடந்து 15 வருடங்களுக்கு மேலாக துயரத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகையான 30 கோடியே 84 லட்சத்து 30 ஆயி ரத்து 673 ரூபாயை உடனடியாக கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவ சாயிகளுக்கு எதிராக சென்னை  உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவை திரும்ப பெற வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந் தேன். ஆனால், இதுவரை இக்கடிதத் தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்திருப்பதாக தெரியவில்லை. நீதிமன்றம் மூலமாக அடுத்தடுத்த முறையீடு என்கிற பெயரில் திட்ட மிட்டு காலதாமதம் ஏற்படுத்துவது என்பது ஏற்கமுடியாது.

ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கையாக, இவர்களுக்கான நீதி உடனடி யாக கிடைக்கப்பெற வேண்டும். மேல்முறையீட்டு மனுவை திரும் பப்பெற வேண்டும் என வலியு றுத்தி வருகிற டிச.22 ஆம் தேதி பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், விவசாய சங்கங் கள், வர்க்க, வெகுஜன, இயக்கங் களை திரட்டி பாரதியார் பல்க லைக் கழகத்தை முற்றுகையிட உள்ளதாக அந்த அறிக்கையில் பி.ஆர்.நடராஜன் எம்,.பி., தெரி வித்துள்ளார்.