districts

img

திமுக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம்

கோவை, ஜூன் 1- கோவை நாடாளுமன்ற திமுக முக வர்கள் ஆலோசனைக்கூட்டம் உப்பிலி பாளையத்தில் உள்ள ஸ்ரீ சாய் மஹா லில் நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற திமுக முக வர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்,  கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள ஸ்ரீ சாய் மஹாலில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட  திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை வகித்தார். இந்த ஆலோச னைக்கூட்டத்தில், சென்னை அண்ணா  அறிவாலயத்தில் இருந்து, கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  கழக சட்டத்துறை செயலாளர் வழக்கறி ஞர் என்.ஆர்.இளங்கோ, கழக தலைமை நிலையச் செயலாளர் டிகே எஸ்.இளங்கோவன் ஆகியோர் காணொலி வாயிலாக, முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். இக்கூட்டத்தில், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவை நாடாளுமன்ற தொகுதி  திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்,  திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச்செய லாளர் குமார், வழக்கறிஞர் அணி அமைப்பாளரும், தலைமை முகவரு மான அன்புசெழியன் மற்றும் பகுதி  கழகச் செயலாளர்கள், மாநில நிர்வாகி கள், திமுக முகவர்கள் கலந்து கொண்ட னர்.