districts

img

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.ஒரு கோடி

நாமக்கல், செப்.23- நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ.1 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்கிறது. கடந்த 1935ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டு 87 ஆண்டுகளாக நெசவாளர்களின் முன் னேற்றத்துக்கு உதவும் வகையிலும், வேலைவாய்ப்பினை வழங்கும் பொருட்டும் செயல்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு 30 சதவிகிதம் வரை அரசு சிறப்புத் தள்ளு படியை வழங்கி வருகிறது. நாமக்கல் கோ-ஆப்டெக்ஸில் நிகழாண்டுக்கான தீபாவளி பண்டிகை சிறப்பு விற் பனையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வியாழனன்று  தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை ஆசிரியை சுதா  என்பவர் பெற்றுக் கொண்டார்.  இங்கு புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், ஆரணி பட்டுப் புடவைகள், சேலம் பட்டுப் புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டுப் புடவைகள் ஏராள மாக விற்பனையில் உள்ளன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவ னத்தின் ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள்,  கையுறைகள்,டேபுள் மேட், ஸ்கிரின் துணிகள், தலைய ணைகள் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிறுவனத்தில் தீபாவளி விற்பனை இலக்கு  ரூ.1 கோடியென நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  கோ-ஆப்டெக்ஸ் கனவு நனவு திட்டம் மாதாந்திர தவணைத் திட்டத்தில் கூடுதல் பலன் உள்ளதால் வாடிக்கை யாளர்கள் தொடர்ந்து கனவு நனவு திட்டத்தில் உறுப்பின ராக சேர்ந்து வருகின்றனர்.   இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சு. காங்கேயவேலு, நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் பெ.செல்வாம்பாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீ.சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

;