districts

பட்டா செல்லுமா? பத்திரம் செல்லுமா? பரிதவிக்கும் திருப்பூர் மக்கள்

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்து இடம் வாங்கி கிரையம் செய்து வீடு கட்டி  வசித்து வரும் மக்களிடம், திடீரென இடத்தைக் காலி செய்ய சொன் னால் என்ன பாடு படுவார்கள்? அதுதான் திருப்பூரில் நடந்து  வருகிறது. கடந்த நான்காண்டு களாக பல்வேறு பகுதிகளில், “நீங் கள் குடியிருக்கும் இடம் கோவில் பூமி, எனவே நீங்கள் காலி செய்ய வேண்டும்!”, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என கூறி மக்களிடம் நோட்டீஸ் வழங்கி வருகிறார்கள். சாதாரண ஏழை, எளிய மக்கள் வீடு அல்லது சாதாரண கடை கட்டி பிழைத்து வரு கின்றனர். கடந்த 1963 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாநில அரசு ரயத்துவாரி பட்டா மூலம், கோபி மற்றும் கோவை செட்டில்மென்ட் தாசில்தார்கள் மூலம் உத்தர விட்டு உரிய தொகை பெற்று இம் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளன.

இந்நிலப் பிரச்சினையில் ஒரு  பகுதி மக்களுக்கு தீர்வு காணப்பட் டுள்ளது. வேறு சில பகுதி மக்கள்  தாங்கள் வசிப்பதற்கு சிறுக, சிறுக சேமித்த பணத்தில் விலை கொடுத்து வாங்கி பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறைப்படி கிரையம் செய்து வீடு கட்டியுள்ள னர். பல ஆண்டுகளாக சொத்து  வரி, மின் கட்டணம், குடிநீர் வரி  செலுத்தியும், சில தேவைகளுக் காக வங்கியில் அடமானக் கடன் பெற்றும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது இடம் கோவில் நிலம் என்று காலி செய்ய நோட்டீஸ் கொடுப்பது மக்களை அதிர்ச்சியிலும், மன அழுத்தத்திலும், பயத்திலும் உறைய வைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டை தற்போது கோவில் நிலம் என கூறுவது எப்படி? பத்திரம் பதிவு செய்ய எப்படி அனுமதிக்கப்பட்டது? முதல் விற்பனை செய்தோர் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை?

கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர் வரை இந்த நிலங்கள் குறித்து எனன ஆட்சேபணை செய்தார்கள்? லே அவுட் போட்டு விற்பனை செய்வதை வேடிக்கை பார்த்தார்களா? என அடுக்கடுக்கான கேள்வி எழுகிறது. அரசுத் துறை செய்த தவறால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டா செல்லுமா? பத்திரம் செல்லுமா? இதுவரை உழைத்து சேமித்து பணத்தை கொடுத்து வாங்கிய இடத்தை இழந்து விடு வோமா? என்ற அச்சத்தோடு அவர் கள் வாழ்ந்து வருகிறார்கள். பிரச் சனைக்குத் தீர்வு செய்து கொடுக்க வேண்டிய அரசுத் துறையோ சில மதவாத அமைப்புகளின் தொடர் நி ர்பந்தந்தால் செட்டில்மெண்ட் தாசில்தார் மூலம் வழங்கப்பட்ட பட் டாவையே நிறுத்தி வைக்க உத்தர விடுகிறது. இது சரியல்ல!  கோவில் நிலங்கள் என சர்ச்சை உள்ளதை பதிவு செய்ய கூடாது என 2012இல் பதிவு துறைக்கு அரசு உத்தரவிட் டுள்ளதும் சரியல்ல. புதிய அர சாணை போட்டு மக்களை ஆக்கிர மிப்பாளர்கள் என குற்றவாளியை போல் சித்தரிப்பது நியாயமல்ல. தற்போது மாநில அரசு பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க, மறு கிரையம் செய்ய, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். பாதிக்கப்பட்டோரின் குரலாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது.

தீர்வு நம்மிடம் உண்டு, ஒற்றுமையே வலிமை என்பதை கருத்தில் கொண்டு செயலாற் றுவோம். மக்களின் நில உரி மையை மீட்டெடுப்போம். டி.ஜெயபால்  (சிபிஎம் தெற்கு மாநகரச் செயலாளர்)

;