சேலம், டிச.21- ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் மீது பழிவாங் கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலை வர் மு.சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண் டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலை யிலிருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வு ஆணைகளை கால தாமத மின்றி உடனடியாக வழங்க வேண்டும் உள் ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.ஜே.கண்ணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலை வர் ந.திருவேரங்கன், மாவட்ட செயலா ளர் ஜான் ஆன்ஸ்டீன், மாவட்ட பொருளா ளர் கோவிந்தராஜ், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் செல்வம், சி.முருகப் பெருமாள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். தருமபுரி
தருமபுரி
தருமபுரி ஊரக வளர்ச்சி முகமை அலு வலகம் முன்பு மாவட்ட தலைவர் ஜி.சதீஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் மாநிலத் துணைத்தலைவர் ஆர். ஆறுமுகம், மாவட்டசெயலாளர் பா.சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் ச.இளங்கும ரன், மாவட்ட பொருளாளர் கு.சர்வோத் தமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் வாழ்த்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளா னோர் கலந்து கொண்டனர்.