திருப்பூர், ஜூலை 4- திருப்பூரில் கடன் பெற்ற கணவரை தற்கொலைக்குத் தள்ளிய பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அவரது மனைவி கடன் பெற முடியாதபடி முட்டுக்கட்டை போட்டுள்ளது. மனிதாபிமானமற்ற இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ள பஜாஜ் நிறுவனத்தின் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் செவ்வாயன்று அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி, அங்கேரிப்பாளையம் மகா விஷ்ணு நகரில் குடியிருந்து வந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் பஜாஜ் நிறுவனத்திடம் நுண்கடன் (மைக்ரோ பைனான்ஸ்) கடன் பெற்று இருந்தார். இந்நிறுவனம் கொடுத்த மன உளைச்சலால் சென்ற ஆண்டு ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண் டார்.
அவர் பெற்ற கடனை அவர் மனைவி செல்வியால் கட்ட முடிய வில்லை. எனவே அந்த கடனை ரத்து செய்திட கோரி அவரது மனைவி கடந்த ஆண்டு செப்.12ஆம் தேதி மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் மனு அளித்துள் ளார். இப்போது சுய உதவிக் குழுக்களில் அவரால் கடன் பெற முடியாதவாறு பஜாஜ் நிறுவனம் ஐ மார்க் போட்டுள் ளது. ஏற்கனவே இந்நிறுவனம் கொடுத்த மன உளைச்சலால்தான் வாங் கிய கடனை ஒரு பகுதி கட்டியிருந்த போதும் கூட மீண்டு வர முடியாத நிலை யில் அவர் கணவர் தற்கொலை செய்து கொண்டார். அந்நிறுவனத்திடம் இழப் பீடு கோரி மாதர் சங்கம் சார்பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் ஐ மார்க் போட்டுள் ளது. இப்பிரச்சனை தொடர்பாக அந்நிர் வாகத்திடம் விசாரித்து செல்வியின் கண வர் வாங்கிய கடனை ரத்து செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில், மாவட்ட தலைவர் எஸ்.பவித்ரா, மாவட்ட செயலாளர் கு.சரஸ் வதி, பொருளாளர் ஆர்.கவிதா, வடக்கு ஒன்றிய தலைவர் கே.வசந்தி, ஒன்றிய செயலாளர் சி.பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.