districts

img

எந்த நேரமும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்: மலைவாழ் மக்களுக்கு மாற்று இடம் தர கோரிக்கை

திருப்பூர், செப். 7 - உடுமலைப்பேட்டை மலைப் பகுதி யில் உள்ள பூச்சிக்கொட்டாம்பாறை செட்டில்மெண்ட் மேற்பகுதியில் தொடர் கனமழை காரணமாக எந்த நேர மும் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப் புக்கும், மக்கள் உயிருக்கும் ஆபத்து ஏற் படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. எனவே இந்த மக்களுக்கு குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என்று  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்ட தலைவர் கே.குப்புசாமி,  மாவட்ட செயலாளர் கோ.செல்வன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இது  தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் எஸ்.வினீத்திற்கு அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது: உடுமலைப்பேட்டை மலைப்பகுதி யில் உள்ள பூச்சிகொட்டாம்பாறை வனக் குடியிருப்பில் 35க்கும் மேற்பட்ட  முதுவன் இன பழங்குடியின மக்கள்  வசித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட்  14ஆம் தேதி இரவு கனமழை பெய்த போது இரவு சுமார் 12 மணியளவில் குடி யிருப்புக்கு மேல் பகுதியில் உள்ள மலை சரிவில், மண் சரிவு ஏற்பட்டு பாறை கற்கள் மண் நகர்ந்து ஊருக்குள்  வந்தது. ஊரின் மேல் பகுதியில் உள்ள  வசந்தம்மாள் என்பவரின் வீட்டுக்கு அரு கில் பலா மரம் உள்ளது. அந்த பலா மரம்  மீது பாறைக் கற்கள் மோதி நின்றது. பலா  மரம் தடுக்காமல் இருந்திருந்தால் ஊருக்குள் நகர்ந்து பாறை உருண்டு வந்து குடியிருக்கும் வீடுகளை சேதப்ப டுத்தி, மக்கள் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும். தற்பொழுது தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கக்கூடிய இடத்தில் தொங் கிக் கொண்டிருக்கக்கூடிய கற்கள்,  பாறைகள் எப்போது வேண்டுமானா லும் சரிந்து வரும் ஆபத்தான நிலையில்  உள்ளது. தற்பொழுது பாறை மண் கற் கள் சரிந்து வந்தால் செட்டில்மெண்டில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடையும். மனித உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உள் ளது. இதனால் 25க்கும் மேற்பட்ட வீடுக ளில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் வீடுகளில் தங்குவதில்லை. மக்கள் உயி ருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட லாம் என்ற நிலை உள்ளது. மக்கள் தற்போது வசித்து வரும் இடம் ஆபத்தானதாக உள்ளதால் இம் மக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் குடியிருப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ராஜ் என்பவரின் விவசாய நிலத்துக்கு அருகில் உள்ள வன நிலத் தில் வேறு இடம் ஒதுக்கித் தரும்படி அந்த  மக்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

;