தருமபுரி, அக்.21- உயர வளர்ச்சி தடைபட்டோருக்கு மாற்றுத்திறனாளியாக அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர். அதில் தெரிவித்திருப்பதாவது, உலக உயர வளர்ச்சி தடைப்பட்டோர் தினத்தை முன்னிட்டு உயர வளர்ச்சி தடை பட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து, அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறப்பு திட்டங்களை உரு வாக்கிட வேண்டும். உயர வளர்ச்சி தடைப்பட்டோருக் கான சிறப்பு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும். மாதாந் திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கேலி, கிண்டல் செய்வதை தடுக்க மாநில அரசின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அரசு பேருந்துகள் அனைத்திலும் தாழ்வாக படிக்கட்டுகள் அமைத்து, மாநில முழுவதும் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரி விக்கப்பட்டிருந்தது. இக்கோரிக்கை மனுவை சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ஜி.கரூரான், மாவட்ட பொருளாளர் தமிழ்செல்வி ஆகி யோர் அளித்தனர்.